ஜம்முவுக்கு கிடைத்தன, காஷ்மீருக்கு என்ன கிடைத்தது: முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி
ஜம்மு: "ஜம்முவுக்கு, ஐஐடி,ஐஐஎம் கிடைத்தன, அதேநேரத்தில் காஷ்மீருக்கு என்ன கிடைத்தது," என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பினார்.
காஷ்மீரின் புத்காம் பகுதியில் சட்டப் பல்கலைக்கழகத்தை அமைக்க அரசு திட்டமிட்டு, ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் ஏற்கனவே ரூ.50 கோடி ஆரம்ப நிதியை ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், ஜம்முவைச் சேர்ந்த தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இந்த விவாதங்கள் எழுந்துள்ளன.ஜம்முவில் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுகின்றன.
இந்நிலையில் ஜம்முவில் உமர் அப்துல்லா செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி:
"ஜம்முவிற்கு ஐஐடி,ஐஐஎம் கிடைத்தன. அதே நேரத்தில் காஷ்மீருக்கு என்ன கிடைத்தது?"
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஐஐடி மற்றும் ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்கள் ஜம்முவிற்கு ஒதுக்கப்பட்டபோது, பிராந்திய சமநிலை குறித்த கேள்விகள் ஏன் எழவில்லை.
ஜம்முவில் தேசிய நிறுவனங்கள் அதிகம் இருக்கும் நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஒரு முக்கிய கல்வி நிறுவனத்தை அமைப்பது நியாயமானது.
இவ்வாறு உமர் அப்துல்லா கூறினார்.