கர்நாடகாவில் நீடிக்கும் அதிகார மோதல்
பெங்களூரு: அவசியம் ஏற்படும் போதெல்லாம், சித்தராமையா, டிகே சிவகுமார் இருவரும் டில்லியில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படுவார்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறி உள்ளார்.
மழைவிட்டும் தூவானம் விடாத கதையாக, மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதாக இல்லை என்பது போல், கர்நாடகாவில் முதல்வர் பதவியை பிடிக்க, டிகே சிவகுமாருக்கும், அந்த பதவியை விட்டுத்தராமல் இருக்கும் சித்தராமையாவுக்கும் இடையே மோதல் நீண்டு கொண்டே இருக்கிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் இருவரிடையேயான அதிகார போட்டி ஓயவில்லை.
அவ்வப்போது சித்தராமையா ஆதரவாளர்களும், டி.கே. சிவகுமார் ஆதரவாளர்களும் பொதுவெளியில் முதல்வர் பதவியை பற்றி பேசி வருகின்றனர். இந் நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம், முதல்வர் பதவிக்கான அதிகார மோதல் குறித்தும், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார் எப்போது டில்லிக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது பேசிய மல்லிகார்ஜூன கார்கே, தேவைப்படும் போதெல்லாம் கட்சி தலைமை இருவரையும் டில்லிக்கு அழைக்கும் என்றார்.
காங்கிரஸ் என்றாலே அதிகார மோதல் இருக்கத்தான் செய்யும்
ஏன்னா இருக்கிறவன் உயிர் மூச்சி உள்ளவரை பதவியை விட்டு போகமாட்டான்