சர்க்கரை ஆலையை திறக்க வலியுறுத்தல்

மேலுார்: மேலுார் தாலுகா அலுவலகத்தில் துணை தாசில்தார் ராஜ்குமார் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. விவசாயிகள் கிருஷ்ணன், பழனிச்சாமி, மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கம்பூர் பகுதியில் இரவில் மட்டுமே மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் 15 ஊராட்சிகளின் பாசனத்திற்கு கள்ளந்திரி பெரியாறு கால்வாயில் இருந்து புதிதாக கால்வாய் அமைக்க வேண்டும்.

சிங்கம்புணரி கால்வாயில் நிறைந்துள்ள மணல், சீமை கருவேல மரங்களை அகற்றி மராமத்து பார்க்க வேண்டும்.

இந்தாண்டு 5 ஆயிரம் ஏக்கர் கரும்பு பயிரிடப்பட்டுள்ளதால் அலங்காநல்லுார் சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும். பூதமங்கலம் பகுதி கண்மாயில் பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளதால் தண்ணீர் திறக்க வேண்டும் என்றனர்.

Advertisement