'கொடை' யில் பழமையான கார் கண்காட்சி

கொடைக்கானல்: கொடைக்கானல் மூஞ்சிகல்லில் பழமையான கார் ,டூவீலர்களின் கண்காட்சி நடந்தது.

சர்வதேச சுற்றுலாத்தலமாக உள்ள கொடைக்கானலில் 1936 --- 1953 ல் பயன்பாட்டில் இருந்த வின்டேஜ் ஆஸ்டின் செவன், வில்லீஸ் ஜீப் உள்ளிட்ட பழைய கார்களின் கண்காட்சி நடந்தது.

சென்னை, திருச்சி கொடைக்கானலை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

70 வாகனங்கள் இடம் பெற்றன.

துவக்கத்தில் பயன்படுத்தப்பட்ட புல்லட், பி.எஸ், ஜாவா உள்ளிட்ட டூவீலர்களும் இடம் பெற்றது. ஏற்பாடுகளை கொடைக்கானல் இளைஞர்கள் செய்திருந்தனர்.

Advertisement