குறிஞ்சி மெட்ரிக் பள்ளியில் இளம் விஞ்ஞானிகள் கண்காட்சி
அரூர்: -தர்மபுரி மாவட்டம், அரூர் குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலை பள்ளி வளாகத்தில், குறிஞ்சி இளம் விஞ்ஞானிகள் கண்காட்சி நடந்தது.
இதை கோபிநாதம்பட்டி இன்ஸ்பெக்டர் லட்சுமி தொடங்கி வைத்தார். மாவட்ட தனியார் பள்ளிகள் கல்வி அலுவலர் ஜெயகாந்தம் கண்காட்சி அரங்கை பார்வையிட்டு வாழ்த்தினார். நிகழ்ச்-சியில், பள்ளி தலைவர் தமிழ்மணி, தாளாளர் அசோகன், செயலாளர், கந்தபாரதி, பொருளாளர் சிதம்பரம் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்து கொண்டு, மாணவர்களின் அறிவியல் முயற்சிகளை பாராட்டினர்.பள்ளி முதல்வர் ரவி வரவேற்று, மாணவர்க-ளிடையே அறிவியல் சிந்தனை, ஆராய்ச்சி மனப்-பாங்கு மற்றும் செய்முறை கற்றலின் முக்கியத்-துவத்தை எடுத்துரைத்தார்.
எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வகுப்பு வரை, மாண-வர்கள் அனைத்து பாடங்களிலும் தயாரித்த மாதிரிகள், செயல்முறை விளக்கங்கள் மற்றும் புதுமையான திட்டங்கள், கண்காட்சியில் இடம் பெற்றன. மாணவர்களின் படைப்பாற்றலும், அறி-வியல் ஆர்வமும், பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.