குன்றத்து கோயிலில் ரூ.ஒரு கோடி உண்டியல் வருவாய்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், உப கோயில்கள், கிரிவல உண்டியல்கள் நேற்று மதுரை மண்டல இணை கமிஷனர் மாரியப்பன், கூடலழகர் பெருமாள் கோயில் உதவி கமிஷனர் பிரதிபா, ஆய்வர் இளவரசி முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டன.

பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ரூ. 1,02,60,550, தங்கம் 151 கிராம், வெள்ளி 2,550 கிராம் இருந்தது. கோயில் பணியாளர்கள், ஸ்ரீ ஸ்கந்த குரு வித்யாலயா வேதபாடசாலை மாணவர்கள், பக்தர் பேரவையினர், ஐயப்ப சேவா சங்கத்தினர், அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவியர் உண்டியல் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement