ஈரானில் பதற்றம் தணியும்; காங் எம்பி சசி தரூர் நம்பிக்கை
புதுடில்லி: ஈரானில் நிலவும் பதட்டங்கள் தணியக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் இருக்கிறது என காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்து உள்ளார்.
திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் சசி தரூர் கூறியதாவது: அதிகாரிகள் இணைய சேவையை துண்டித்துள்ளதால், உலக சமூகம் ஈரானிடமிருந்து முழுமையான துல்லியமான தகவல்களைப் பெறவில்லை. ஈரானில் நிலவும் பதட்டங்கள் தணியக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் இருக்கிறது. போராட்டக்காரர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றுவது ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அமெரிக்கா தனது நடவடிக்கையை குறைத்துவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இணைய சேவை முடக்கம் நம்பகமான தகவல்கள் இல்லாததால் மதிப்பீடுகள் கடினமாகி விட்டது. ஈரான் மக்கள் அனைவரும் அமைதியையும், ஒழுங்கையும் விரும்புவார்கள். வேலை நிறுத்தங்களை விரும்ப மாட்டார்கள், தாக்குதல்களை விரும்ப மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆனால் நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் செல்வதன் காரணமாக புவிசார் அரசியல் தாக்கங்கள் குறித்தும் சில பதட்டங்கள் இருக்கலாம்.
பதட்டங்கள் குறைவது ஈரான் மக்களுக்கு மட்டுமல்ல, பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் சாதகமாக இருக்கும். காசா அமைதி ஒப்பந்தம் இப்போது ஒரு இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, தாக்குதல்கள் இன்னும் தொடர்கின்றன. எனவே காசாவில் ஒவ்வொரு நாளும் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். இது இன்னும் அனைவருக்கும் அமைதியான சூழ்நிலையாக இல்லாத நிலை நீடிக்கிறது . இவ்வாறு சசி தரூர் கூறினார்.
வங்க தேசத்திலே எப்போ தீரும்?
எப்படி தணியும்.. ராகுல் கான் தீர்த்து வைப்பாரா..