ஜனநாயகன் விவகாரம்: விஜய்க்கு ராகுல் ஆதரவு
புதுடில்லி: ஜனநாயகன் படம் தணிக்கைச்சான்று கிடைக்காத விவகாரத்தில், விஜய்க்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் ஆதரவு தெரிவித்துள்ளார்.
விஜய் நடித்த ஜனநாயகன் படம், தணிக்கைச்சான்று கிடைக்காமல் முடங்கியுள்ளது. இந்த படத்துக்கு சான்று கோரி, தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. தணிக்கை சான்று வழங்க உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டதும், சென்சார் போர்டு சார்பில் மேல் முறையீடு செய்து தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
இதையடுத்து படத்தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அங்கும் சென்சார் போர்டு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியினர் பலரும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலினும், சென்சார் போர்டை ஆயுதமாக பயன்படுத்துவதாக மத்திய அரசு குற்றம் சாட்டி இருந்தார்.
இந்நிலையில், தணிக்கைச்சான்று கிடைக்காத விவகாரத்தில், மத்திய அரசை குறை கூறும் வகையில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் வெளியிட்ட பதிவு: 'ஜன நாயகன்' திரைப்படத்தை தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகம் தடுக்கும் முயற்சி, தமிழ் கலாசாரத்தின் மீதான ஒரு தாக்குதலாகும். பிரதமர் மோடி, தமிழ் மக்களின் குரலை அடக்குவதில் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளார்.
விஜய் தனிக்கட்சி தொடங்கி தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வரும் நிலையில், ஜனநாயகன் பட விவகாரத்தில் அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் அடுத்தடுத்து ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (32)
vadivelu - thenkaasi,இந்தியா
14 ஜன,2026 - 07:28 Report Abuse
200 க்கும் மேற்பட்ட சினிமா படங்களை தடை செய்தது காங்கிரஸ் என்று சாருக்கு தெரியுமா 0
0
Reply
K.Ramachandran - Chennai,இந்தியா
13 ஜன,2026 - 19:12 Report Abuse
ராகுல் தமிழனை இவளோ கம்மியா எடை போட்டுருக்கார் பாருங்க.
Censor பாருங்க. 0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
13 ஜன,2026 - 18:39 Report Abuse
இந்த ஆள் எல்லாம் உயர்பதவிக்கு தகுதிஇல்லாதவர். எவ்வளவோர் பிரச்னைகள் மக்கள் முன் இருக்க ஒரு சினிமாக்காரனுக்கு வக்காலத்து வாங்குகிறார். சுத்த சுய நல இத்தாலி குடும்ப முன்னேற்ற ஊழல் வாதி. 0
0
Reply
V.Mohan - ,இந்தியா
13 ஜன,2026 - 18:37 Report Abuse
உண்மையிலே அது ரூபிள்ஸ்ல காசோ, இந்தளவு விடியல் அரசுக்கு நாலா பக்கமும் முட்டு குடுக்கறாங்க ? என்னவோப்பா . தேர்தல் வர்ரதுக்குள்ள...நாம ... ஒருவழி...ஆகிருவோம் 0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
13 ஜன,2026 - 17:12 Report Abuse
பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இட நிரப்புதலில் கஷ்டம் இருந்தால் காங்கிரசை அணுகி அவர்கள் அங்கத்தினர்களை மற்றும் திமுகவை நெருங்கி அவர்கள் அங்கத்தினர்களை உடனே பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்து கொள்ளவும் 0
0
Reply
Haja Kuthubdeen - ,
13 ஜன,2026 - 16:57 Report Abuse
ஜனநாயகன் படத்துக்கும் தமிழ் கலாச்சாரத்திற்கும் என்ன லிங்க் இருக்கு??!!!!இப்டி பித்துக்குளி தனமா உளரும் தலைவர்களால்தான் காங்கிரஸ் அழிந்தே விட்டது....தலையே இப்படி இருந்தால் வால்கள் எப்பிடி இருக்கும். 0
0
Reply
Haja Kuthubdeen - ,
13 ஜன,2026 - 16:52 Report Abuse
உண்மையாவே ஜனநாயகன் விசயத்தில் என்ன குழப்பமோ..யார் இதில் தலையிட்டார்கள் என்பதே புரியாத புதிர்...பிஜெபி தலையிட்டால் அதனால் அந்த கட்சிக்கு என்ன லாபம்...விஜயை முடக்க நினைத்திருந்தால் அதற்கு ஆயிரம் விசயம் இருக்கு..கரூர் விசயத்திலேயே ஜோலிய முடித்திருக்கும்.ராகுல் ஆதரவு தருவதால் ஜனநாயகன் நாளையே ரிலீஸ் ஆகிவிடுமா...திமுகவை மிரட்ட விஜயை இழுக்கிறார்.விஜயும் அந்த அளவு பண்பாளரா என்பதும் யோசிக்க வச்சுட்டார்.இக்கட்டான சூழலில் பதுங்கு குழியில் கிடந்தப்ப எடப்பாடி சட்டசபையில் ஆதரவு கொடுத்ததற்கு குறைந்த பட்சமா ஒரு நன்றி சொல்ல கூட அவருக்கு நேரமில்லாத பெருந்தலைவர் அவர்!!!ஆகக்கூடி ராகுலிடமும் சுயநலன்..விஜயிடமும் நல்ல செயல்கள் இல்லை... 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
13 ஜன,2026 - 16:30 Report Abuse
காங்கிரெஸ்ஸை கேவலப்படுத்தி வந்திருக்கும் பராசக்தி படத்தைப்பற்றி ராகுலிடம் கேள்வி கேட்க எந்த "நடுநிலை" பத்திரிகைக்காரர்களும் துப்பில்லை. அநியாயத்துக்கு நியாயமாக இருக்கும் ஊடகங்களுக்கு நன்றி. நன்றி. 0
0
V Ramanathan - Chennai,இந்தியா
13 ஜன,2026 - 18:19Report Abuse
ஊடகங்கள் தினமலர் துக்ளக் தவிர காசுக்கு விலை போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. 0
0
Reply
theruvasagan - ,
13 ஜன,2026 - 15:53 Report Abuse
தமிழ் கலாசாரத்தின் மீது தாக்குதலா. அறவிலிகளே. தொட்டபெட்டா ரோடு மேல முட்டை பரோட்டா தமிழ் கலாசாரமா. 0
0
Reply
NACHI - ,
13 ஜன,2026 - 15:39 Report Abuse
சிபிஐ. ..விசாரினை ஒரு வேலைய NDA கூட்டனி போய்ட்டா ...அதற்கு தான் ...இந்த ஜனநாயகன் சப்போர்ட் ... 0
0
Reply
மேலும் 21 கருத்துக்கள்...
மேலும்
-
பழங்குடியினர் பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கல்
-
திருக்கோவிலுார் கல்லுாரியில் கணினி பயன்பாடு பயிற்சி
-
நாட்டு நிர்வாகத்தின் மையமாக மக்கள் இருப்பதால் ஜனநாயகம் வெற்றிகரமாக செயல்படுகிறது: பிரதமர் மோடி பெருமிதம்
-
இன்றைய நிகழ்ச்சி :மதுரை
-
எல்.கே. துளசிராம் பிறந்த தினவிழா
-
வருவாய்த்துறைக்கு 70 புதிய வாகனங்கள்
Advertisement
Advertisement