பழங்குடியினர் பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கல்

கச்சிராயாபாளையம்: கல்வராயன் மலையில் உள்ள அரசு பழங்குடியினர் நலப் பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

கல்வராயன் மலையில் உள்ள இன்னாடு, மணியார்பாளையம், கொட்டப்புத்துார் உட்பட மலை பகுதிகளில் 8 அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. பள்ளிகளுக்கு சியாட்டில் இந்தியா குழு சார்பில் ரூ 2 லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

பழங்குடியினர் நலத்துறை திட்ட அலுவலர் அம்பேத்கர் தலைமை தாங்கினார். சியாட்டில் இந்திய குழு திட்ட இயக்குனர் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் துளி அறக்கட்டளை இயக்குனர் பெரியார், தன்னார்வலர் விஸ்வநாதன், சியாட்டில் தலைவர் தேவராஜ், முத்துக்குமாரசாமி ஒருங்கிணைப்பாளர் மித்ரா, பள்ளி தலைமை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement