ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுக்கலாமே; தெருநாய்கள் தொடர்பான வழக்கில் வக்கீலுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி சூடு
நமது டில்லி நிருபர்
தெருநாய்கள் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, தெரு நாய்களை தத்தெடுப்பதற்கான தேசிய கொள்கையை வலியுறுத்திய வக்கீலை சுப்ரீம்கோர்ட் நீதிபதி மேத்தா தலைமையிலான அமர்வு கடுமையாக சாடி உள்ளது. மேலும் தெருக்களில் உள்ள அனாதை குழந்தைகளை ஏன் தத்தெடுக்க கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தலைநகர் டில்லியில், தெரு நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில், இது தொடர்பாக, சுப்ரீம்கோர்ட் தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு முன் நடந்து வருகிறது. இந்த வழக்கு இன்று (ஜனவரி 13) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நாய் பிரியர் ஒருவரின் சார்பாக ஆஜரான வக்கீல் ஒருவர், '' டில்லியில் 200 தெருநாய்கள் பராமரிக்கும் 80 வயது மூதாட்டி சார்பாக வாதிடுகிறேன். டில்லியில் நாய் அம்மா என்று மூதாட்டி அழைக்கப்பட்டு வருகிறார். தெரு நாய்களை தத்தெடுப்பதற்கான தேசிய கொள்கை கொண்டு வர பரிசீலிக்க வேண்டும்.
வீட்டில் 8-10 நாய்களை வைத்திருக்கும் பலர் இருக்கின்றனர். அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கலாம். ஊக்கத்தொகை கருத்தடை மற்றும் தடுப்பூசி போன்ற செலவுக்கு பயன்படும்'' என வாதிட்டார்.
இதற்கு, தெருக்களில் உள்ள அனாதை குழந்தைகளை தத்தெடுக்கலாமே? என வக்கீலை நீதிபதிகள் கடுமையாக சாடினர். அப்போது நீதிபதி சந்தீப் மேத்தா கூறியதாவது: 2011 ம் ஆண்டு நீதிபதியாக நான் பதவி உயர்வு பெற்றதிலிருந்து, இவைதான் நான் கேட்ட மிக நீண்ட வாதங்கள். இதுவரை யாரும் மனிதர்களுக்காக இவ்வளவு நீண்ட நேரம் வாதிட்டதில்லை.
தெருநாய்கள் தொடர்பான வழக்கில் நாய் பிரியர்களின் சார்பாக பல வக்கீல்கள் வாதாடினர். ஆனால் மனிதர்கள் சார்பாக யாரும் வாதிடவில்லை, கருத்துக்களை முன்வைக்கவில்லை, என்றார்.
உத்தரவு
மேலும், ''எந்தவொரு குழந்தைக்கோ அல்லது முதியவருக்கோ நாய் கடித்து காயம் அல்லது மரணம் அடைந்த பிறகும், எந்த நடவடிக்கையும் எடுக்காத மாநிலங்கள் இழப்பீடு தொகை செலுத்த வேண்டும். தெருநாய்களுக்கு உணவளிப்பவர்கள் பொறுப்பேற்க வேண்டும்'' என சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
வாசகர் கருத்து (20)
shankar - ,
13 ஜன,2026 - 22:51 Report Abuse
Humans are often considered the most advanced species on Earth, and as a civilized society, we must find humane solutions to such issues. People need to understand the history of dogs—they are not merely domestic animals d for human benefit they were tamed for purposes such as hunting and companionship over time. The judicial system must also recognize that the Earth belongs to all species, not just humans. 0
0
Reply
Yasararafath - Chennai,இந்தியா
13 ஜன,2026 - 22:13 Report Abuse
தெரு நாய் ஆதரவற்ற குழந்தையா.? 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
13 ஜன,2026 - 22:10 Report Abuse
இந்த நாய்ப்பிரியர்கள் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுக்கலாம். அதற்கு முன்பு தங்கள் வயதான பெற்றோர்களை முதியவர்கள் இல்லத்தில் இருந்து மீட்டெடுத்து, தங்கள் வீட்டிலேயே மரியாதையுடன், அன்புடன் பார்த்துக்கொள்ளலாம் அவர்கள் வாழ்நாள் முழுக்க. இந்த நாய்ப்பிரியர்கள் பலருடைய வீடுகளில் நாய்கள் சிறப்பாக பராமரிக்கப்படும். ஆனால் அவர்கள் பெற்றோர்கள் எங்கோ ஒரு முதியோர் இல்லத்தில் ஆதரவற்று இருப்பார்கள். 0
0
Reply
ஜெகதீசன் - ,
13 ஜன,2026 - 20:37 Report Abuse
தெரு நாய்களை ஒழிப்பது மிக முக்கியம். இதில், கேள்வி தான் கிடுக்குப்பிடியா இருக்கு .... ஆர்டர் போட பயமா? 0
0
Reply
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
13 ஜன,2026 - 19:18 Report Abuse
ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்தால் பொறுப்பு அதிகமாகும். முதலில் ஜாதி குறுக்கே நிற்கும். படிக்க வைக்கணும். வளர்ப்பு செலவுகள். வேலையில் அமர்த்தணும். கல்யாணம் செய்து வைக்கணும்.
தெருநாய்கள் என்றால் பிஸ்கெட் வாங்கி போட்டால் போதும். மற்றபடி தெருவில் மேய விடலாம். நாய்களின் காலை கடனுக்கு கூட அடுத்தவர் வீட்டு வாசல் தான். ஏன் சரியா வளக்கலே என்று யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். இலவசமாக வீட்டை காவல் காக்கும் .. நாய் பிரியர்களுக்கு இத்தனை அனுகூலங்கள் இருக்கு. 0
0
Reply
Anand - chennai,இந்தியா
13 ஜன,2026 - 18:15 Report Abuse
நம் நாட்டிற்கு நல்லது படும் இதுபோன்ற ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்தல் செயல்களுக்கு வெளிநாட்டு நன்கொடை, சோரஸ் போன்றவர்கள் படியளக்கமாட்டார்கள். இதுபோன்று நாட்டை கெடுக்க யார் எது செய்தாலும் அவர்களுக்கு படியளக்கப்படும். எனவே..... 0
0
Reply
V.Mohan - ,இந்தியா
13 ஜன,2026 - 16:25 Report Abuse
என்ன ஒரு பொய்மையாளர்கள் இந்த நாய் பிரியர்கள்? தினமும் லட்சக்கணக்கான கோழி போன்ற பறவைகள் மனிதர்கள் சாப்பிட உதவியாக கழுத்தை சீவியோ வெந்நீரில் முக்கியோ சாகடிக்கப்படுகின்றன. அதேபோல எண்ணிலடங்கா ஆடுகள், மாடுகள் , பன்றிகள் நிர்தாட்சண்யமாக கொல்லப்பட்டு சாப்பிடப்படுகின்றன. மீன்கள் துடித்து இறக்கின்றன. இவைகள் அனைத்தும் வளர்க்கப்பட்ட பின்னரே மனிதனால் உயிர் இழக்கின்றன. அப்படி
இருக்கும் போது இந்த தெரு நாய்களுக்கு மட்டும் ஏன் வழக்குகள் போடப்படுகின்றன? ரேபீஸ் நோய் உருவாக்கும் நாய்கள், அதற்கான தடுப்பூசி தயாரிக்கும் கம்பெனிகளுடைய லாபத்தை அதிகரிக்கும் பங்குதாரர்கள். எனவே அதிக ஃபீஸ் வாங்கும் வழக்கறிஞர்கள் வழக்காடுகின்றனர். இது உலக மகா கேவலம் மற்றும் மோசமுறையாகும். தெருநாய்கள் காலம் காலமாக கணக்கின்றி பெருகும் போது கொல்லப்படுவது புதிதல்ல. இதற்காக ஜெர்க் அடிப்பது நாட்டை நாசமாக்கும் செயல் ஹூம் 0
0
Reply
Haja Kuthubdeen - ,
13 ஜன,2026 - 15:48 Report Abuse
வெறி நாய் தெருநாய்க்கு ஆதரவா பேசுற அத்தனை பேரையும் பிடித்து முகாமில் அடைக்க சொல்லி உத்தரவு போடுங்க யுவர்ஆனர்... 0
0
Reply
KRISHNAN R - chennai,இந்தியா
13 ஜன,2026 - 15:26 Report Abuse
வக்கீல்களை விடுங்க. விலங்கு ஆர்வலர் என்ற பெயரில் மருந்து கம்பனிக்கும்,,உதவியாகவும், தொண்டு நிறுவனம் என்ற பெயரில்,, வாழ்ந்து வருகிறார்கள் 0
0
Reply
GMM - KA,இந்தியா
13 ஜன,2026 - 15:03 Report Abuse
நியாயம், அநியாயம் இரண்டை ஆதரித்து வாதிடும் ஒரே இடம் நீதிமன்றம். மத்திய அரசு இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தெரு நாய்கள் பராமரிப்பு முடிவு முனிசிபல் ஆணையர். நகராட்சிகள் முடிவு எடுக்கும். இதனை ஏன் உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது? வழக்கறிஞர் எந்த வழக்கும் எங்கும் எப்போதும் தொடரலாம். தவறான வழக்கு, வாதம் பற்றி தீர்வில் தெரியும். தவறான வழக்கின் மொத்த செலவை வசூல் செய்ய தேவையில்லாத வாதங்கள், மனு குறையும். நீதிமன்ற வழக்கு ஒரு திறந்த வெளி சிறை. நிர்வாகமா கட்சியால் சிதைந்து வருகிறது. மக்கள் நாய்படாத பாடு பட்டு வாழ்கிறார்கள். 0
0
Reply
மேலும் 10 கருத்துக்கள்...
மேலும்
-
சம்பள உயர்வு அறிவிப்பு கண்துடைப்பு பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு கண்டனம்
-
இயற்கையோடு இணையும் இளம் விவசாயிகள் மணப்பாறையில் விவசாய புரட்சி
-
ஓய்வூதியம் இல்லாமல் அவதிப்படும் நகர கூட்டுறவு வங்கி ஊழியர்கள்
-
தமிழக ஆட்சி அதிகாரத்தில் தொண்டர்கள் பங்கு கேட்பதில் தவறில்லை; சச்சின் பைலட்
-
மேற்கு வங்கத்திற்கு 12 புதிய ரயில்களை அன்பு பரிசாக தரும் பிரதமர் மோடி; அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
-
பணி நேரம் முடிந்ததால் விமானத்தை இயக்க மறுத்த விமானி: பயணிகள் கோபம்
Advertisement
Advertisement