பெங்களூரு தமிழ் சங்கம் சார்பில் வரும் 16ல், பொங்கல் விழா
ஹலசூரு: பெங்களூரு தமிழ் சங்கம் சார்பில் வரும், 16ம் தேதி திருவள்ளுவர் தின விழா மற்றும் பொங்கல் விழா நடக்கிறது.
பெங்களூரு ஹலசூரு ஏரிக்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலை, 2009ல் திறக்கப்பட்டது.
அன்று முதல் பெங்களூரு தமிழ் சங்கம் சார்பில், திருவள்ளுவர் தின விழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்தாண்டு தமிழ் சங்க தலைவர் கோ.தாமோதரன் தலைமையில், 16ம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் பொங்கல் விழா நடக்கிறது.
அன்று காலை, 8:30 மணியளவில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். அதனைத் தொடர்ந்து, 9:00 மணிக்கு சங்க வளாகத்தில் அனைத்து உறுப்பினர்களும் புடைசூழ பொங்கல் விழா நடக்கும்.
பின், தமிழ் சங்கத் தலைவர் கோ.தாமோதரன் பேசிய பின், பொங்கல் கலைநிகழ்ச்சிகளை துவக்கி வைக்கிறார்.
சங்க நடன வகுப்பு மாணவர்கள், காமராஜர் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் கலைநிகழ்ச்சிகளுடன், பறையாட்டம், கரகாட்டம் போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இதனை தொடர்ந்து சங்கத்தின் கவிதை நுால் வெளியீடு நடக்கிறது.
விழாவில் தமிழர்கள், தமிழ் அமைப்பினர், தமிழ் ஆர்வலர்கள் திரளாக கலந்து கொள்ளும் படி சங்கத்தினர் அழைப்பு விடுத்து உள்ளனர்.
மேலும்
-
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அமைப்பதில் இளைஞர்கள் ஆர்வம்: பிரதமர் மோடி
-
கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதானவர் மஹா. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி!
-
வளம் மிக்க துறைகளை காங்கிரஸ் தேடிப்போவதில்லை; மாணிக்கம் தாகூர் சொல்லாமல் விட்டது இதுதான்!
-
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் 10ம் ஆண்டு நிறைவு விழா; பிரதமர் மோடி பங்கேற்பு
-
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்; பிரிட்டன் பார்லியில் எம்பி காட்டம்
-
பண்டிகை நாளிலும் போராட்டம்; சென்னையில் 22வது நாளாக போராடிய ஆசிரியர்கள் கைது