குடியரசு தின விழா காண பொது மக்களுக்கு இ - பாஸ் முறை அறிமுகம்

பெங்களூரு: ''குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை காண, பொது மக்களுக்கு இ - பாஸ் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது,'' என, பெங்களூரு மாவட்ட கலெக்டர் ஜெகதீஷ் தெரிவித்தார்.

அவரது அறிக்கை:

நாட்டின், 77வது குடியரசு தினம் வரும் 26ம் தேதி, பெங்களூரு மானக் ஷா பரேடு மைதானத்தில் நடக்கிறது. இக்கொண்டாட்டத்தை காண, பொது மக்களுக்கு இ - பாஸ் முறை அறிமுகமாகி உள்ளது.

விருப்பம் உள்ளவர்கள், இன்று முதல் ஜன., 24ம் தேதி வரை மாலை 5:00 மணிக்குள், www.sevasindhu.karnataka.gov. in என்ற சேவா சிந்து இணையதளத்தில், தேவையான அனைத்து தனிப்பட்ட விபரங்களையும் பதிந்து, இ - பாஸ் பெற்று கொள்ளலாம்.

இ - பாஸ் வைத்திருப்பவர்கள், அணிவகுப்பு மைதானத்தின் நுழைவு வாயில் எண் 5ன் வழியாக செல்லலாம்.

முன்னதாக, இ - பாஸ் பெற்றதற்கான அச்சிடப்பட்ட நகலையோ அல்லது டிஜிட்டல் (மொபைல்போனில்) நகலையோ வைத்திருக்க வேண்டும்.

இப்பதிவு செயல்முறை தொடர்பான உதவிக்கு, சேவாசிந்து இணையதளத்தில் உள்ள உதவி பகுதியை பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement