'லிங்க்' அனுப்பி பணம் பறிக்கும் கும்பல்
மேலுார்: மேலுார் பகுதியில் போக்குவரத்து விதிமுறையை மீறியதாக எஸ்.எம்.எஸ்., மூலம் 'லிங்க்' அனுப்பி வங்கி கணக்கில் இருந்து நுாதன திருட்டு நடக்கிறது.
வாகன ஓட்டிகளுக்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் இருந்து அனுப்புவது போல் 'விதிமுறைகளை மீறியதாக' கூறி அபராதம் செலுத்த வேண்டும் எனக்கூறி மர்மநபர்கள் எஸ்.எம்.எஸ்., அனுப்புகின்றனர். விதிமீறல் ஆதாரங்களை சரிபார்க்க அலைபேசியில் ஆர்.டி.ஓ., சலான் செயலியை பதிவிறக்கம் செய்தால், புகைப்பட ஆதாரங்கள் உட்பட விரிவான தகவல் கிடைக்கும் என்று தெரிவித்து 'லிங்க்' அனுப்புகின்றனர்.
சிறிது நேரத்தில் 'இகோர்ட்' அறிவிப்பு என்ற பெயரில் மற்றொரு எஸ்.எம்.எஸ்., அனுப்புகின்றனர். இதனால் பயந்து போகும் உரிமையாளர்கள் எஸ்.எம்.எஸ்.,ல் உள்ள 'லிங்க்' மூலம் உள்ளே செல்லும் போது அவர்கள் யூ.பி.ஐ., பின் நம்பர் கேட்டு அதன்மூலம் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை 'சுருட்டி' விடுகின்றனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும்
-
தி.மு.க., சார்பில் விளையாட்டு போட்டி
-
அண்ணாமலையார் தீர்த்த வாரிக்கு பந்தக்கால் நடப்பட்டது
-
சின்னசேலத்தை நகராட்சியாக தரம் உயர்த்த கோரிக்கை! சிறப்பு நிலை பேரூராட்சி அந்தஸ்தால் நிதி பற்றாக்குறை
-
துணை அஞ்சல் அலுவலகம் திறப்பு
-
தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
-
விபத்தில் ஒருவர் பலி