தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்திட பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கலெக்டர் அறிவுறுத்தினார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கடந்த ஆண்டில் பொது தேர்வின் தேர்ச்சி சதவீதத்தை இவ்வாண்டு காலாண்டு, அரையாண்டுத் தேர்வு தேர்ச்சியுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதம் உயர்த்த கூடுதல் கவனம் செலுத்திட தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
கணிதம், சமூக அறிவியல் பாடத்தில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவதற்கு எளிமையாக கற்பிக்கும் வழிமுறைகள் குறித்தும் தலைமை ஆசிரியர்களிடம் கேட்டறியப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை தொடர்ந்து அதிகரிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
சி.இ.ஓ., கார்த்திகா உள்ளிட்ட கல்வித் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
எம்ஜிஆர் பிறந்தநாள் சிறப்புப்பதிவு; எம்ஜிஆர் தழுவிய சட்டை தொண்டர் வீட்டில் அலங்கரிப்பு
-
நவீன ஜல்லிக்கட்டு போட்டி
-
விசைத்தறியை நவீன மயமாக்கும் சப்ளையர் திட்டத்தில் சேர விண்ணப்பிக்க அழைப்பு
-
இலக்கிய பேரவை திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்
-
மாட்டுப்பொங்கல் கோலாகலம்
-
தை மாத பிரதோஷத்தையொட்டி ஏகாம்பர ஈஸ்வரருக்கு சிறப்பு பூஜை