ரயில் பயணிகள் தவிப்பு

உசிலம்பட்டி: உசிலம்பட்டி ரயில்வே பீடர் ரோட்டில் ரயில்வே இடம் வரை பேவர்பிளாக் ரோடு உள்ளது.

ரயில்வே இடம் துவங்கும் பகுதியில் கழிவுநீர் கால்வாய் சீர் செய்யப்படாமல் ரோட்டிலேயே செல்கிறது. சிறுமழை பெய்தாலும் 10.மீ., நீளத்திற்கு சேறும் சகதியுமாக மாறி ஆட்டோ, டூவீலர் செல்ல இடையூறாக உள்ளது.

இரவு 9:40 மணிக்கு சென்னை ரயிலில் இருந்து இறங்குபவர்கள் போதிய வெளிச்சமின்றி சகதிக்குள் நடக்க வேண்டியுள்ளது. கழிவுநீர் கால்வாயை சீரமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை வேண்டும்.

Advertisement