'இண்டி' கூட்டணியை எதிர்த்து குரல் கொடுப்பாரா ஸ்டாலின்?

@quote@ பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினரான அண்ணாமலை, 'மும்பையை சர்வதேச நகரம்' என பேசினார்.
இதை ஏற்காத மஹாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, 'அண்ணாமலை மஹாராஷ்டிரா வரும்போது கையை வெட்டுவோம்; காலை வெட்டுவோம்' என மிரட்டல் விடுத்துள்ளார். அது மட்டுமல்லாது, மலிவான வார்த்தைகளை பிரயோகித்து, ஒட்டுமொத்த தமிழர்களையும் இழிவுபடுத்தி பேசி இருக்கிறார். இவை கண்டிக்கத்தக்கவை.

வட மாநிலத்தவர்களை மிரட்டியும், கொச்சைப்படுத்தியும் பேசி, தி.மு.க., தலைவர்களால் துவக்கி வைக்கப்பட்ட இனவெறி தீ, இன்று அவர்களது, 'இண்டி' கூட்டணியினராலேயே தமிழர்களை நோக்கி திரும்பி இருக்கிறது.

'தமிழகத்தை தலைகுனிய விட மாட்டேன்' என்று, போலியாக சூளுரைக்கும் முதல்வர் ஸ்டாலின், இப்போது தமிழர்களின் மாண்பை காக்க, 'இண்டி' கூட்டணியினரை எதிர்த்து குரல் கொடுக்க போகிறாரா அல்லது மவுனம் சாதிக்க போகிறாரா?

-நயினார் நாகேந்திரன் தலைவர், தமிழக பா.ஜ.,quote

Advertisement