பாதாள லிங்கம் தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி

தாரமங்கலம்: தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் பாதாள அறையில் உள்ள பாதாள லிங்கத்தை பக்தர்கள் தரிசித்து வந்தனர். 3 மாதங்களுக்கு முன் பெய்த கன மழையால், அப்பகுதியில் உள்ள குளத்தில் தண்ணீர் நிரம்பியது. இதனால் பாதாள அறையில் தண்ணீர் தேங்-கியது.

அங்கு மின் ஒயர்களும் இருந்ததால் பாதுகாப்பு கருதி பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் பக்தர்கள் கோரிக்கையை ஏற்று, கோவில் நிர்வாகம், அறையில் இருந்து தண்ணீரை மோட்டார் மூலம் எடுத்து, தளம் அமைத்து நேற்று முன்தினம் முதல், பக்தர்கள் பாதாள லிங்கத்தை
தரிசிக்க அனுமதி அளித்தனர்.

Advertisement