ஓமலுார் ஜி.ஹெச்.,ல் இணை இயக்குனர் ஆய்வு
ஓமலுார்: சென்னையில் இருந்து, சேலம் மாவட்டத்துக்கு வந்த, எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்ட இயக்குனர் சீதாலட்சுமி தலைமையில் அதிகா-ரிகள், நேற்று பல்வேறு குழுக்களாக பிரிந்து, மாவட்டம் முழுதும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு
மேற்கொண்டனர்.
அதன்படி ஓமலுார் அரசு மருத்துவமனையில் உள்ள ஒருங்கி-ணைந்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையத்தை(ஐ.சி.டி.சி.,) இணை இயக்குனர் ஜெகதீசன் ஆய்வு செய்தார். மேலும் தொற்று பாதிக்கப்பட்ட நபர்களின் சிகிச்சை பதிவேடு உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பொது இடங்களில், எச்.ஐ.வி., தொற்று குறித்த விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்-பட்டுள்ளது குறித்து ஆய்வு செய்தார். ஓமலுார் அரசு மருத்துவ-மனை ஐ.டி.சி.டி., ஆலோசகர் கவிதா
உடனிருந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement