கே.டி.எம்., 'ஆர்.சி., 160' 'ஆர் - 15' உடன் போட்டியிட வந்தாச்சு

'கே.டி.எம்.,' நிறுவனம், 'ஆர்.சி., 160' என்ற ஸ்போர்ட்ஸ் பைக்கை அறிமுகப்படுத்தி உள்ளது. இது, இந்நிறுவனத்தின் ஆரம்ப விலை, ஸ்போர்ட்ஸ் பைக்காகும்.


'யமஹா ஆர் - 15' பைக்குக்கு போட்டியாக வந்துள்ள இந்த பைக்கில், 'ட்யூக் 160' பைக்கில் உள்ள, அதே சேசிஸ், இன்ஜின், கியர்பாக்ஸ் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன.
Latest Tamil News

மேலும், 37 எம்.எம்., யூ.எஸ்.டி., போர்க், மோனோ ஷாக் சஸ்பென்ஷன்கள், 110, 140 பிரிவு டயர்கள், 17 அங்குல அலாய் சக்கரங்கள், 320, 230 எம்.எம்., டிஸ்க் பிரேக்குகள், எல்.சி.டி., டிஸ்ப்ளே, எல்.இ.டி., லைட்டுகள், டூயல் சேனல் ஏ.பி.எஸ்., டிராக்ஷன் கன்ட்ரோல் என பல அம்சங்கள் இதில் வந்துள்ளன.


'டியூக் 160' பைக்குடன் ஒப்பிடுகையில், ஸ்போர்ட்ஸ் பைக்குகளில் அடிப்படையாக வரும் வெளிப்புற 'பேரிங்' கூடுதலாக வந்துள்ளது.

Advertisement