பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார்கள் விலை கிடு கிடு

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்-தார்கள் விலை உயர்ந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட லாலாப்பேட்டை, கள்ளப்

பள்ளி, கருப்பத்துார், பிள்ளபாளையம், வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, கொம்பாடிப்பட்டி, மகாதானபுரம், சிந்தலவாடி, பொய்கைப்புத்துார், திருக்காம்புலியூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். வாய்க்கால் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்-போது வாழைத்தார்கள் வரத்து சரிவு காரணமாக விலை உயர்ந்-துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறுவடை செய்யப்பட்ட வாழைத்தார்கள், லாலாப்பேட்டை வாழைக்காய் கமிஷன் மண்டி-களுக்கு கொண்டு வந்து விவசாயிகள் விற்கின்றனர். கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் ஒவ்வொரு வாழைத்தாருக்கும், 200 ரூபாய் கூடுதலாக விற்பனையானது. பூவன் வாழைத்தார், 500 ரூபாய், ரஸ்தாளி வாழைத்தார், 550 ரூபாய், கற்பூரவள்ளி வாழைத்தார், 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வாழைத்தார்களை உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் வாங்கி சென்றனர்.

Advertisement