சாலை பணியாளர்கள் விழிப்புணர்வு பேரணி

குளித்தலை: குளித்தலை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில், 37-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம்-2026ஐ முன்னிட்டு, இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்-தது.


குளித்தலை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கணபதி, விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஜெய-பாலன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசு-ரங்களை, பொது மக்களுக்கு வழங்கினார்.

சாலை ஆய்வாளர் சேகர், சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். பேரணியில் உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் இருந்து துவங்கி, ஒருங்கி-ணைந்த நீதிமன்ற அலுவலகம், அரசு மருத்துவமனை சுங்க வாயில் வரை சென்று, மீண்டும் உதவி கேட்ட பொறியாளர் அலு-வலகத்தை வந்தடைந்தது.
சாலை பணியாளர்கள், உதவி பொறியாளர்கள், அலுவலக பணி-யாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement