ரூ.47.05 லட்சம் மதிப்பில் நுண்ணுயிரியியல் ஆய்வகம் திறப்பு
கரூர்: கரூர், தோரணக்கல்பட்டி ஆவின் பால் நிறுவனத்தில், புதிய நுண்ணுயிரியியல் ஆய்வகத்தை, சென்னையிலிருந்து முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
பின், கலெக்டர் தங்கவேல் கூறியதாவது: கரூர் தோரணக்கல்-பட்டியில், தேசிய பால் பண்ணை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஆவின் பால் நிறுவனத்தில், 47.05 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய நுண்ணுயிரியியல் ஆய்வக கட்டடம் மற்றும் பால், பால் உபபொருட்கள் பரிசோதனை உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளது. பால் நுண்ணியிரியல் ஆய்வகத்தில் பாலின் தரம், பாதுகாப்பு மற்றும் அதில், உள்ள நுண்ணுயிரிகளை ஆராயப்படும். பொது மக்கள் பருகக்கூடிய பாலில், ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களையும், தீமை செய்யும் கிருமிகளும் இருக்க வாய்ப்புள்ளது. அதனை பரிசோதனை செய்வது மிகவும் அவசியம்.
மேலும், பால் கெட்டு போகாமல் இருக்கிறதா என்பதை அறிய சில அடிப்படை சோதனைகள் செய்யப்படுகின்றன. பாலில் நோயை உண்டாக்கும் கிருமிகள் உள்ளனவா என்பது குறித்தும் சோதிக்கப்படும். பால் உபபொருட்களான தயிர், சீஸ் தயாரிக்கும் போது, அவற்றுக்கு தேவையான லாக்டோ பேசிலஸ் போன்ற நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் துாய்மை மற்றும் வீரியம் குறித்து சோதிக்கப்படும். இந்த ஆய்வகத்தில் இன்குபேட்டர், ஆட்டோகிளேவ், மைக்ரோஸ்கோப், லேமினார் ஏர் ப்ளோ உள்-ளிட்ட முக்கிய கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ, கிருஷ்ண-ராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா, ஆவின் பொது மேலாளர் பிரவீனா உள்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
ஈரானில் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவுவதில் உறுதி; மத்திய அரசு திட்டவட்டம்
-
பொருளாதார பாதுகாப்பு மிகவும் முக்கியமானது: ஜெய்சங்கர் வலியுறுத்தல்
-
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை நாளை துவக்கி வைக்கிறார் பிரதமர்
-
29 ஆண்டுகளில் ஒரே ஒரு பதவி உயர்வுதான் டி.எஸ்.பி., கனவில் இருக்கும் இன்ஸ்பெக்டர்கள் முட்டுக்கட்டை போடுகிறார்களா ஐ.பி.எஸ்., அதிகாரிகள்
-
பாலமேடு முதல் சூரியூர் வரை அதிரவைத்த ஜல்லிக்கட்டு
-
தை அமாவாசை : மதுரை - ராமேஸ்வரம் சிறப்பு ரயில்