பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல்

கரூர்: கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், விலை-யில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பள்ளியில் படிக்கும், 123 மாணவர்களுக்கு சைக்கிள், 10ம் வகுப்பு, 41 மாணவர்கள், பிளஸ் 2 படிக்கும், 82 மாணவர்க-ளுக்கு பொது தேர்வை எளிதாக அணுகும் வகையில் வினா---விடை புத்தகங்களை, கரூர் எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்ச-ருமான செந்தில்பாலாஜி வழங்கினார். தொடர்ந்து, கரூர் பெரிய குளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 44 பேருக்கு சைக்கிள், 125 மாணவர்களுக்கு பொது தேர்வு வினா--விடை புத்-தகம், கரூர் சி.எஸ்.ஐ., பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 80 பேருக்கு சைக்கிள், 198 பேருக்கு 10ம் வகுப்பு, பிளஸ் 2 வினா---விடை புத்தகம், கரூர் சி.எஸ்.ஐ., ஆண்கள் மேல்நிலைப் பள்-ளியில், 45 பேருக்கு சைக்கிள், 107 பேருக்கு 10ம் வகுப்பு, பிளஸ் 2 வினா--விடை

புத்தகம் வழங்கப்பட்டது.


மேலும், கரூர் மாநகராட்சி குமரன் உயர்நிலைப் பள்ளியில், 50 பேர், கரூர் கோட்டைமேடு மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில், 24 பேர், கரூர் வாங்கபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 70 பேருக்கு, 10ம் வகுப்பு வினா-விடை புத்தகம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், கரூர் மாநகராட்சி மண்டல தலைவர்கள் கனகராஜ், ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement