பகுதி நேர ஆசிரியரின் தற்கொலை முடிவு ஆளும் அரசின் மீதான கரும்புள்ளி; நயினார் நாகேந்திரன்
சென்னை; பகுதி நேர ஆசிரியரின் தற்கொலை முடிவு ஆளும் அரசின் மீதான கரும்புள்ளி என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.
அவரது அறிக்கை;
பணி நிரந்தரம் கோரி தொடர்ந்து 6வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பகுதிநேர ஆசிரியர் கண்ணன் என்பவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவரும் செய்திகள் நெஞ்சை கனக்கச் செய்கின்றன.
"உங்க கனவ சொல்லுங்க" என விளம்பர நாடகம் போடும் முதல்வர் ஸ்டாலின் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகத் தெருவில் இறங்கிப் போராடிய ஆசிரியர் கண்ணன் வாழ்நாள் கனவிற்கு செவிமடுக்காமல் போனதன் விளைவு தான் இந்த துர்மரணம். உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சிக்கு வந்தவுடன் பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வதாகப் போலி வாக்குறுதியளித்த திமுகவினை நம்பி இத்தனை ஆண்டுகள் காத்திருந்த ஆசிரியர் கண்ணன் , இறுதியில் தற்கொலை முடிவை எடுத்திருப்பது ஆளும் அரசின் மீதான கரும்புள்ளி. திமுகவின் அப்பட்டமான நம்பிக்கை துரோகத்திற்கு நம்மில் ஒருவரை மீண்டுமொருமுறை நாம் இழந்திருக்கிறோம்.
இப்படிப்பட்ட கொடூர ஆட்சியை ஒழித்தால் மட்டுமே, கடந்த ஐந்து ஆண்டுகளில் அகால மரணமடைந்த அப்பாவி ஆன்மாக்கள் சாந்தியடையும்.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறி உள்ளார்.
மேலும்
-
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் 10ம் ஆண்டு நிறைவு விழா; பிரதமர் மோடி பங்கேற்பு
-
பண்டிகை நாளிலும் போராட்டம்; சென்னையில் 22வது நாளாக போராடிய ஆசிரியர்கள் கைது
-
தை 2ம் தேதி பொங்கல் விழாவைக் கொண்டாடும் கிராம மக்கள்
-
வேலூர் சிஎம்சி மருத்துவமனை விடுதியில் அமலாக்கத்துறையினர் ரெய்டு
-
தவெக சார்பில் சட்டசபை தேர்தல் பிரசாரம்; குழு அமைத்தார் விஜய்
-
உ.பி., மருத்துவ பல்கலை பாலியல் வழக்கு இமாமிடம் போலீசார் தீவிர விசாரணை குற்றஞ்சாட்டப்பட்ட பயிற்சி டாக்டரை நீக்க முடிவு