மிட்செல் அதிரடி சதம்: நியூசிலாந்து அணி வெற்றி

1


ராஜ்கோட்: 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத்தின் ராஜ்கோட்டில் இன்று நடந்தது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் ஷர்மா, கேப்டன் கில் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.
ஆரம்பத்தில் இருவரும் ரன் குவிக்க சிரமப்பட்டனர். அதன்பிறகு, பவுண்டரிகள் மற்றும் சிக்சர்களை விளாசினர். 24 ரன்னில் ரோகித் சர்மா ஆட்டமிழந்து இந்தப் போட்டியிலும் ஏமாற்றம் அளித்தார். கில் அரைசதம் அடித்து 56 ரன்களில் அவுட் ஆனார்.
அதைதொடர்ந்து வந்த விராத் கோலி 2 பவுண்டரிகளுடன் 23 ரன்களில் அவுட் ஆனார். ஸ்ரேயஸ் சோபிக்காமல் 8 ரன்களில் வெளியேறினார்.

கே.எல். ராகுல் அதிரடி சதம்:



அடுத்து வந்த கே.எல். ராகுல் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடினார். ரவீந்திர ஜடேஜா 27 ரன்களும், நிதிஷ் குமார் ரெட்டி 20 ரன்களிலும், ஹர்ஷித் ரானா 2 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர். கே.எல். ராகுல், 11 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் ஆட்டமிழக்காமல் 112 ரன் எடுத்தார்.நியூசிலாந்து அணியின் தரப்பில் கிரிஸ்டன் கிளார்க் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் குவித்தது. இதனையடுத்து நியூசிலாந்து அணிக்கு 285 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.


285 ரன்கள் என்ற இலக்குடன் அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, துவக்க வீரர்கள் கான்வே, நிக்கோல்ஸ் தாக்கு பிடிக்கவில்லை. கான்வே 16 ரன்களில் ஹர்சித் ரானா பந்திலும், நிக்கோல்ஸ் 10 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்தில் ஆட்டமிழந்தனர்.

மிட்செல் அதிரடி சதம்:



அடுத்து வந்த யங், மிட்செல் இருவரும் நிலைத்து ஆடி இந்திய பந்துவீச்சாளர்களை திணறடித்தனர். யங், 7 பவுண்டரிகள் அடித்து 87 ரன்கள் சேர்த்து குல்தீப் பந்தில் ஆட்டமிழந்தார்.மறுமுனையில் விளையாடிய மிட்செல், அதிரடியாக விளையாடி சதம் கடந்தார். அவர் 117 பந்துகளை சந்தித்து 2 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் 131 சேர்த்தார். அவருக்கு துணையாக விளையாடிய பிலிப்ஸ் ஆட்டமிழக்காமல் 32 ரன்கள் சேர்க்க, நியூசிலாந்து அணி, 47.3 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 286 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் 1-1 என்று சமநிலையில் உள்ளது.

@block_B@

NO 1 ODI BATTER

ஐசிசி.,யின் ஒரு நாள் போட்டியின் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில், 1,403 நாட்கள் கழித்து இந்திய வீரர் விராட் கோலி மீண்டும் முதலிடம் பிடித்தார். முதலிடத்தில் இருந்த சக வீரர் ரோகித் சர்மா 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார். நியூசிலாந்து வீரர் மிட்செல் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.block_B

Advertisement