பிஷ்னோய் கும்பலுடன் தகவல் பகிர்வு: கனடா குற்றச்சாட்டுக்கு இந்தியா திட்டவட்ட மறுப்பு


புதுடில்லி: கனடாவிலுள்ள காலிஸ்தான் ஆதரவாளர்களைக் குறிவைக்க லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை பயன்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு இந்தியா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார் படுகொலையில் இந்திய முகவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டியது.

இதனால் தூதர்கள் வெளியேற்றம், பயண எச்சரிக்கைகள் போன்ற ராஜதந்திர மோதல்கள் ஏற்பட்டன.

இந்தப் பிரச்சனை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, இரு நாடுகளும் பரஸ்பரம் தூதர்களை வெளியேற்றியுள்ளன
இது தொடர்பாக கனடா போலீஸ் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கனடாவில் வசிக்கும் தெற்காசிய சமூகத்தினர் பற்றிய தகவல்களை இந்தியாவை சேர்ந்த சிலர் சேகரித்து, அவற்றை பிஷ்னோய் கும்பலிடம் பகிர்ந்து கொள்வதாகவும், அதன் மூலம் கொலை மற்றும் மிரட்டல் போன்ற சட்டவிரோத செயல்கள் அரங்கேற்றப்படுகிறது.
இவ்வாறு கனடா போலீஸ் அறிக்கையில் கூறப்பட்டது.

இந்தியா திட்டவட்ட மறுப்பு:



இந்தக் குற்றச்சாட்டுகளை இந்தியா வன்மையாக மறுத்துள்ளது. கனடா எவ்வித ஆதாரங்களையும் வழங்கவில்லை என்றும், இவை அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் இந்தியா கூறியுள்ளது.

Advertisement