தமிழகம் முழுதும் பொங்கல் பரிசு தொகை வாங்காதோர் 7.81 லட்சம் பேர்!

46

சென்னை: ஜன. 15- தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்ட 3,000 ரூபாய் ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை, 7.81 லட்சம் பேர் வாங்கவில்லை. மொத்த கார்டுதாரர்களில், இதுவரை 98 சதவீதம் பேர் பரிசு தொகுப்பு வாங்கியுள்ள நிலையில், தர்மபுரி, திருப்பத்துார், அரியலுார், பெரம்பலுார், புதுக்கோட்டை மாவட்டங்கள், அதில் முதலிடத்தில் உள்ளன. தென் சென்னை கடைசி இடத்தில் உள்ளது.

தலா, 3,000 ரூபாய்






பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.22 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா, 3,000 ரூபாய் ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, வேட்டி, சேலை ஆகியவை அடங்கிய பரிசு தொகுப்பை தமிழக அரசு அறிவித்தது.
இவற்றை வழங்க, கார்டுதாரர்கள் வீடுகளில் 'டோக்கன்'கள் வினியோகிக்கப்பட்டன. அறிவித்தபடி பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை, கடந்த 8ம் தேதி சென்னை நந்தம்பாக்கம் பட் ரோட்டில் உள்ள ரேஷன் கடையில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

அதை தொடர்ந்து, அன்று முதல் மாநிலம் முழுதும் உள்ள ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வந்தன. இதனால், கடந்த ஒரு வாரமாக ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களின் கூட்டம் காணப்பட்டது.


6,447 கோடி ரூபாய்




நேற்று மாலை 5:00 மணி நிலவரப்படி, 2 கோடியே 14 லட்சத்து 91,255 கார்டுதாரர்களுக்கு தலா, 3,000 ரூபாய் என, மொத்தம் 6,447 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

இது, மொத்த கார்டுதாரர்களில் 96 சதவீதம். இதில், தர்மபுரி, திருப்பத்துார், அரியலுார், பெரம்பலுார், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.

அதாவது, இம்மாவட்டங்களைச் சேர்ந்த கார்டுதாரர்களில், 98 சதவீதம் பேர் பொங்கல் பரிசுகள் வாங்கியுள்ளனர். அதே நேரத்தில், ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை, 7 லட்சத்து 80,764 பேர் வாங்கவில்லை.

தமிழகத்தில் வசதியானவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக தென் சென்னை உள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தில், 94 சதவீதத்துடன் தென் சென்னை கடைசி இடத்தில் உள்ளது. தேனி, மதுரையில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் 95 சதவீதமாக உள்ளது.


ரூ.3,000 ரொக்கத்தை அதிகம்வாங்கிய 'டாப் 10' மாவட்டங்கள்

Latest Tamil News



* சென்னையை, வட சென்னை மற்றும் தென் சென்னை என, இரு மாவட்டங்களாக உணவு வழங்கல் துறை பிரித்துள்ளது. வட சென்னையில் மொத்தம் 10.37 லட்சம் கார்டுதாரர்களில், 9.93 லட்சம் பேர் பொங்கல் பரிசு வாங்கியுள்ளனர். இது, 96 சதவீதம். ன் சென்னையில் உள்ள 10.59 லட்சம் கார்டுதாரர்களில், 9.99 லட்சம் பேர் பரிசு வாங்கியுள்ளனர்.

***

Advertisement