தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது; இன்று சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு

1

சென்னை: சென்னையில் இன்று (ஜனவரி 17) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.



சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜனவரி 15) தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து, 13,290 ரூபாய்க்கு விற்பனையானது.


சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து, 1,06,320 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து, 310 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு 3,000 ரூபாய் அதிகரித்து, 3.10 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று(ஜனவரி 16) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 60 ரூபாய் சரிந்து ஒரு கிராம் 13 ஆயிரத்து 230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று (ஜனவரி 17) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 13 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.


வெள்ளி விலையும் கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 310 ரூபாய்க்கும், கிலோவுக்கு 4 ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்

https:// www.dinamalar.com/news/business-commodity

Advertisement