அலங்காநல்லுாரில் தேவர் சிலை திறப்பு

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வெண்கல சிலை திறப்பு விழா நடந்தது.

அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார். எம்.எல்.ஏ., வெங்கடேசன் முன்னிலை வகித்தார். ஆதிஷ் குரூப்ஸ் சேர்மன் ஆதிமுத்தன் திருப்பணிக்குழு சார்பில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

திருப்பணி குழுத் தலைவர் முத்தையா, செயலாளர் குணசேகரபாண்டியன், பொருளாளர் கதிரேசன், சோழவந்தான் தொகுதி முக்குலத்தோர் நலச்சங்க தலைவர் சார்லஸ் ரங்கசாமி, துணை தலைவர்கள் மாரிசெல்வம், சோனைமுத்து, செயலாளர் கணேசன், கரடி, தமிழ்நாடு முக்குலத்தோர் நலச்சங்க நிறுவனர் செந்தில்குமார், தலைவர் வீரபுத்திரன், பொதுச் செயலாளர் ஆதி முத்துக்குமார், பொருளாளர் குமரேசன், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், முத்தையன், நகர செயலாளர் ரகுபதி, பேரூராட்சி தலைவி ரேணுகா ஈஸ்வரி, துணைத் தலைவர் சாமிநாதன், வி.சி.க., மற்றும் புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement