சத்தீஸ்கரில் 52 நக்சல்கள் சரண்

பிஜப்பூர்: சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில், 1.41 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்ட, 49 பேர் உட்பட 52 நக்சல்கள் நேற்று போலீசில் சரணடைந்தனர்.

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நேற்று 52 நக்சல்கள் போலீசில் சரணடைந்தனர். இவர்கள் தண்டகாரண்யா சிறப்பு மண்டல குழு, மஹாராஷ்டிராவின் பம்ரஹார் மற்றும் ஆந்திரா - ஒடிஷா எல்லையில் செயல்பட்டு வந்த மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர்கள்.

சரணடைந்தவர்களில் 21 பேர் பெண்கள். இவர்களில் 49 பேரை பிடித்து கொடுத்தால் மொத்தம் 1.41 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.

மாநில அரசின் சரணடைதல் மற்றும் மறுவாழ்வு கொள்கையால் ஈர்க்கப்பட்டு 52 பேரும் சரணடைந்தாக பிஜப்பூர் எஸ்.பி., ஜிதேந்திர குமார் யாதவ் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ''சரணடைந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் டிவிஷனல் குழு உறுப்பினர் லக்கு கரம், 32; மாவோயிஸ்ட் படைப்பிரிவு குழு உறுப்பினர்கள் லட்சுமி மத்வி, 28;, சாந்தி, 28. இவர்கள் தலைக்கு தலா 8 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. இது தவிர 5 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த 13 நக்சல்களும் சரணடைந்ததாகவும், அனைவருக்கும் மாநில அரசு உடனடி உதவித்தொகையாக தலா 50,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement