இதே நாளில் அன்று
ஜனவரி 16, 2017
கர்நாடக மாநிலம், பெங்களூரில், கல்வியாளர் சி.வி.வெங்கடராமய்யாவின் மகனாக, 1938, மார்ச் 6ல் பிறந்தவர் சி.வி.விஸ்வேஸ்வரா.
சிறுவயதில், இலக்கியம், இசையின் மீது ஆர்வமாக இருந்த இவர், மைசூரு பல்கலையில் இயற்பியலில் எம்.எஸ்சி., பட்டம் பெற்றார். அமெரிக்காவின் கொலம்பியா பல்கலையில், ராபர்ட் புல்லரின் தலைமையில் ஆய்வில் ஈடுபட்டு, ஏ.எம்., பட்டம் பெற்றார். தொடர்ந்து மேரிலாண்ட் பல்கலையில், சார்லஸ் டபிள்யூ. மிஸ்னருடன் பணிபுரிந்தபடியே, அணு துகள் பற்றிய படிப்பை முடித்தார்.
'நாசா'வில் ஆய்வு பணிகளில் ஈடுபட்டார். ஐன்ஸ்டீனின் கொள்கைகள் சார்ந்து, விண்வெளியின் கருந்துளை குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டார். தொடர்ந்து, நியூயார்க், பாஸ்டன், பிட்ஸ்பர்க் பல்கலைகளில் பேராசிரியராக பணிபுரிந்தார்.
பெங்களூரு கோளரங்கத்தின் நிறுவன இயக்குநர், ராமன் ஆய்வு மையத்தின் இயக்குநர் பதவிகளை வகித்து, இளைஞர்களிடம் அறிவியல் சிந்தனைகளை வளர்த்தவர், தன் 79வது வயதில், 2017ல், இதே நாளில் மறைந்தார்.
இவரது நினைவு தினம் இன்று!
மேலும்
-
கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதானவர் மஹா. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி!
-
வளம் மிக்க துறைகளை காங்கிரஸ் தேடிப்போவதில்லை; மாணிக்கம் தாகூர் சொல்லாமல் விட்டது இதுதான்!
-
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் 10ம் ஆண்டு நிறைவு விழா; பிரதமர் மோடி பங்கேற்பு
-
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்; பிரிட்டன் பார்லியில் எம்பி காட்டம்
-
பண்டிகை நாளிலும் போராட்டம்; சென்னையில் 22வது நாளாக போராடிய ஆசிரியர்கள் கைது
-
தை 2ம் தேதி பொங்கல் விழாவைக் கொண்டாடும் கிராம மக்கள்