பாரதீய வித்யா பவன் பொங்கல் இசைவிழா

கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பாரதீய வித்யா பவன் சார்பில், பொங்கல் இசை விழா, ஆர்.எஸ்.புரம் வித்யா பவன் அரங்கில் நடந்து வருகிறது. வரும், 16ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவில் இசை கலைஞர்கள் பங்கேற்று இசை நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றனர்.

மூன்றாம் நாளான நேற்று, கர்நாடக இசை கலைஞர் ஸ்ரீரஞ்சனி தபஸ்யா சந்தான கோபலன் குழுவினரின் வாய்ப்பட்டு இசை நிகழ்ச்சி நடந்தது. இசைக்கலைஞர்கள் கமலகிரன் விஞ்சமுரி வயலின், சாய்ராம் மிருதங்கம், ஆலத்துார் ராஜகணேஷ் கஞ்சிரா இசைத்தனர். இந்த விழாவில், 200 க்கும் மேற்பட்ட இசைப்பிரியர்கள் பங்கேற்று இசை நிகழ்ச்சியை ரசித்தனர்.

Advertisement