சிலம்பம், வள்ளிக் கும்மியுடன் பொங்கல் உற்சாகம்
கோவை: பாப்பம்பட்டி வளர்மதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளித் தாளாளர் வைத்தியநாதன் விழாவில் பங்கேற்று மாணவர்களிடையே பேசுகையில், நமது பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் முக்கியத்துவத்தை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்று வலியுறுத்தினார். மேலும், தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்த பொங்கல் திருவிழாவின் சிறப்புகள் குறித்தும் விளக்கினார்.
விழாவையொட்டி, தமிழர்களின் வீரக்கலையான சிலம்பம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வள்ளிக் கும்மி உள்ளிட்ட மாணவர்களின் நாட்டுப்புற நடனங்கள் நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக, பள்ளி வளாகத்தில் 100 அடி நீளத்தில் வரையப்பட்டிருந்த பிரம்மாண்டமான காளை மாடு ஓவியத்தில் மாணவர்கள் அமர்ந்து மகிழ்ந்தனர். பள்ளி இயக்குனர் ஜெய் கணேஷ், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
இளம் தலைமுறைக்கு வழிகாட்டி கோலி: கவாஸ்கர் பாராட்டு
-
3 தங்கம் வென்றார் துளசிமதி * எகிப்து பாரா பாட்மின்டனில்
-
'பிளே-ஆப்' சுற்றில் பெங்களூரு: தொடர்ந்து 5வது வெற்றி
-
தமிழகம் இரண்டு தங்கம் * தேசிய பள்ளி செஸ் தொடரில்...
-
வங்கதேச அணிக்கு ஐ.சி.சி., கெடு * 'டி-20' உலக கோப்பை தொடரில் பங்கேற்க...
-
வெளியேறியது கேப்டவுன் அணி * 'எஸ்.ஏ.20' தொடரில்