'கல்வியை விரும்பி கற்க வேண்டும்'
மேட்டுப்பாளையம்: -: வாழ்க்கையில் உயர்வதற்கு, கல்வியை விரும்பி கற்க வேண்டும், என, டாக்டர் திலகம் பேசினார்.
காரமடை எஸ்.ஆர்.எஸ்.ஐ., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின், 45ம் ஆண்டு விழா, ஆர்.வி., கலையரங்கில் நடந்தது. விழாவுக்கு பள்ளியின் அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாணவி தாரிகா வரவேற்றார். பள்ளி செயலர் ஜெயக்கண்ணன், முதல்வர் சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மகப்பேறு மற்றும் மகளிர் டாக்டர் திலகம் பேசுகையில், வாழ்க்கையில் உயர்வதற்கு கல்வியை விரும்பி கற்க வேண்டும். பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியமாக வைக்க வேண்டும், என்றார்.
கல்வி, விளையாட்டு துறைகளில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி, ஆசிரியர், ஆசிரியைகள், மாணவர்கள் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர். 12ம் வகுப்பு மா ணவி பிரீத்தி நன்றி கூறினார்.
மேலும்
-
குடியரசு தின அணிவகுப்பு: உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து நாடு முழுவதும் உஷார்!
-
யாருடன் கூட்டணி; டில்லியில் காங்., நிர்வாகிகளுடன் ராகுல் ஆலோசனை
-
அன்னுார் வட்டாரத்தில் பொங்கல் கோலாகல கொண்டாட்டம்
-
உங்களுக்கு செட் ஆகல சார்.. வெயிட் பண்ணுங்க: இலவசங்கள் அறிவித்த இபிஎஸ்சுக்கு டிஆர்பி ராஜா பதில்
-
ஈரானில் தொடரும் வன்முறை; விமானத்தில் டில்லி திரும்பிய இந்தியர்கள்!
-
பொலிவுறு நகரம் இந்தூரில் சுத்தமான குடிநீர் இல்லை; ராகுல் விமர்சனம்