குன்னுாரில் மாநில ஹாக்கி போட்டி துவக்கம்

குன்னுார்: குன்னுாரில் நேற்று மாநில அளவிலான ஹாக்கி போட்டி துவங்கியதில், நீலகிரி ஹாக்கி வீரர்கள் அசத்தினர்.

குன்னுார் அறிஞர் அண்ணா மேல்நிலை பள்ளி மைதானத்தில். 'ஹாக்கி நீலகிரீஸ்' அமைப்பு சார்பில், சுந்தர் மற்றும் அவரின் மனைவி ஷியாமளா ஆகியோர் நினைவாக, மாநில ஹாக்கி போட்டி நேற்று துவங்கியது. எட்டு அணிகள் பங்கேற்றுள்ளன.

போட்டியை, 'ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு' அமைப்பு மாநில செயலாளர் செந்தில் ராஜ்குமார், துவக்கி வைத்தார். சீனியர் ஹாக்கி வீரர்கள் சந்திரன், ஸ்டாலின் மேத்யூ, சர்வதேச ஹாக்கி வீரர் நடராஜன், கவுன்சிலர் மன்சூர் முன்னிலை வகித்தனர். 3வது போட்டியை முன்னாள் நகராட்சி தலைவர் சரவணகுமார் துவக்கி வைத்தார்.

நேற்று நடந்த போட்டியில், தமிழ்நாடு காவல்துறை, கோவை லெவன் அணியை, 4-0 என்ற கோல் கணக்கில் வென்றது. தொடர்ந்து நடந்த போட்டியில் நீலகிரி அணி, உடுமலை வித்யாசாகர் அணியை 6-0 என்ற கோல் கணக்கில் வென்றது. கோவில்பட்டி ராஜிவ் காந்தி அணி, - சென்னை பட்டாபிராம் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை, 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. சென்னை சேலஞ்சர் ஹாக்கி கிளப், மதுரை ஜி.கே., மோட்டார்ஸ் அணி மோதியதில், 2-1 என்ற ோல் கணக்கில் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றது. நாளை (17ம் தேதி) இறுதி போட்டியில்

வெற்றி பெறும் அணிக்கு, 50,000 ரூபாய், இரண்டாம் இடம் பெறும் அணிக்கு, 37,500 ரூபாய், மூன்றாம் இடம் பெறும் அணிக்கு, 25,000 ரூபாய் மற்றும் நான்காம் இடம் பெறும் அணிக்கு 12,500 ரூபாய் ரொக்கப் பரிசுகள் மற்றும் தனிநபர் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

ஏற்பாடுகளை, ஹாக்கி நீல்கிரீஸ் அமைப்பு தலைவர் அனந்த கிருஷ்ணன், துணை தலைவர் சுரேஷ் குமார், செயலாளர் பாலமுருகன், பொருளாளர் ராஜா, மூத்த ஹாக்கி வீரர்கள், அனைத்து கிளப் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

Advertisement