தர்மசாஸ்தா கோவிலில் மகர விளக்கு உற்சவம்
பாலக்காடு: கேரளா மாநிலம், பாலக்காடு நகர் அருகே உள்ளது மேற்கு யாக்கரை சாஸ்தா நகர் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில். இக்கோவிலில் ஆண்டு தோறும் மகர விளக்கு உற்சவம் நடக்கிறது. நடப்பாண்டு உற்சவம் நேற்று முன்தினம் காலை நடை திறப்புடன் துவங்கியது.
அதிகாலை, 5:00 மணிக்கு மகா கணபதி ஹோமம், 7:00 மணிக்கு மூலவருக்கு உஷ பூஜை, காலை, 9:30 மணிக்கு செண்டைமேளம் முழங்க ஆடை ஆபரணங்கள் அணிந்த 'திருவம்பாடி கண்ணன்' என்ற யானை மீது, புழைக்கல் மகா கணபதி கோவிலில் இருந்து மூலவருக்கு அபிஷேகம் செய்வதற்கான தீர்த்தம் எடுத்து வரும் வைபவம் நடந்தது.
அதன்பின், செண்டைமேள வித்வான் பல்லச்சேனை ஜெய்சங்கர் தலைமையிலான, 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட 'பஞ்சாரிமேளம்' என அழைக்கப்படும் செண்டை மேளம் முழங்க, மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது.
காலை, 11:00 மணிக்கு புஷ்ப அலங்கார பூஜை, 12:00 மணிக்கு உச்சபூஜை, யானைக்கு உணவளிக்கும் யானையூட்டு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை, 7:00 மணிக்கு மூன்று யானைகள் அணிவகுப்புடன் செண்டை மேளம் முழங்க பாலக்கொம்பு எழுந்தருளும் நிகழ்ச்சி, விஸ்வேஸ்வரா கோவில் சன்னதியில் துவங்கி, சாஸ்தா கோவிலில் வந்தடைந்தது. இரவு 10:30க்கு உடுக்கு கொட்டி ஐயப்பன் பாட்டும் இசைக்கப்பட்டது. நேற்று அதிகாலையில் மூலவருக்கு நடந்த சிறப்பு பூஜைகளுடன் விழா நிறைவடைந்தது.
முன்னதாக, கடந்த 11ம் தேதி முதல் கோவில் வளாக கலையரங்கில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், நாராயணீய பாராயணம், விளக்கு பூஜைகள் நடந்தன.
மேலும்
-
பணி நேரம் முடிந்ததால் விமானத்தை இயக்க மறுத்த விமானி: பயணிகள் கோபம்
-
மதுரையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தம்பதி சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
-
இந்தியா வந்தார் ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர்; கிரிக்கெட் பேட் பரிசளித்த ஜெய்சங்கர்
-
ஈரான் விவகாரம் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் புடின் ஆலோசனை
-
தென் கொரியா முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டு சிறை
-
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அமைப்பதில் இளைஞர்கள் ஆர்வம்: பிரதமர் மோடி