வாழைத்தார்கள் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
மேட்டுப்பாளையம்: பொங்கலை முன்னிட்டு வாழைத்தார்களின் விலை உயர்வாக ஏலம் போனதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேட்டுப்பாளையம் தென் திருப்பதி நால் ரோடு அருகே, தனியார் வாழைத்தார் ஏல மண்டி உள்ளது. மண்டியில் நடந்த ஏலத்தில், ஒரு கிலோ நேந்திரன் அதிகபட்சம், 25 ரூபாய்க்கும், கதளி அதிகபட்சம், 50 ரூபாய்க்கும் ஏலம் போனது.
வாழைத்தார்கள் ஏலம் போனதில், ஒரு தார் பூவன் அதிகபட்சம், 800 ரூபாய்க்கும், ரஸ்தாலி அதிகபட்சம், 750க்கும், தேன் வாழை, 800க்கும், செவ்வாழை அதிகபட்சம், 1200 ரூபாய்க்கும், மொந்தன், 350க்கும், ரோபஸ்டா அதிகபட்சம், 650க்கும், பச்சை நாடன், 500 ரூபாய்க்கும் ஏலம் போனது.
பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்த வாரத்தை விட இந்த வாரம், பூவன் வாழைத்தார், 150 ரூபாய் வரை விலை உயர்ந்து இருந்தது.
மேலும் மற்ற வாழைத்தார்களின் விலையும் உயர்வாக ஏலம் போனது, விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இத்தகவலை வாழைத்தார் ஏல மண்டி நிர்வாகிகள் வெள்ளியங்கிரி, சின்னராஜ் ஆகியோர் கூறினர்.
மேலும்
-
பணி நேரம் முடிந்ததால் விமானத்தை இயக்க மறுத்த விமானி: பயணிகள் கோபம்
-
மதுரையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தம்பதி சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
-
இந்தியா வந்தார் ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர்; கிரிக்கெட் பேட் பரிசளித்த ஜெய்சங்கர்
-
ஈரான் விவகாரம் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் புடின் ஆலோசனை
-
தென் கொரியா முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டு சிறை
-
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அமைப்பதில் இளைஞர்கள் ஆர்வம்: பிரதமர் மோடி