'நோ மேப்பிங்' வாக்காளர்கள் எத்தனை பேர்?

சூலுார்: 2002 வாக்காளர் பட்டியலுடன் தொடர்பு படுத்த முடியாத, வாக்காளர்களின் விபரங்கள் சரிபார்க்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

சூலுார் சட்டசபை தொகுதி வரைவு வாக்காளர் பட்டியலில், 2 லட்சத்து, 93 ஆயிரத்து, 516 பேர் இடம் பெற்று இருந்தனர். 45 ஆயிரத்து, 311 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன.

இதையடுத்து, கடந்த, 2002 ஆண்டு வாக்காளர் பட்டியலில் தொடர்பு படுத்த முடியாத 'நோ மேப்பிங்' வாக்காளர்கள், 5 ஆயிரத்து, 211 பேருக்கு, நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.

நோட்டீஸ் பெற்றவர்களிடம், விசாரணை அதிகாரிகளான, தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன் ஆஜாராகி விளக்கம் அளித்து வருகின்றனர். வேலை நிமித்தமாக வெளியூரில் உள்ளவர்கள், தங்கள் உறவினர்கள் வாயிலாக, அதிகாரிகளிடம் பேசி விபரங்களை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த, 2002 ஆண்டு வாக்காளர் பட்டியலிலுடன் தொடர்பு படுத்த முடியாத, 4 ஆயிரத்து, 590 வாக்காளர்களுக்கு, நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. பழைய வாக்காளர் பட்டியலில் இருக்கும் பெற்றோரின் விபரங்களை அளிக்காதது அல்லது தங்களது ஆவணங்களை தராதவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளும் பணி தீவிரமாக நடந்தது. அவர்களிடம் உள்ள ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, உள்ளிட்ட, 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை கொண்டு சரிபார்த்து, அவர்களை பட்டியலில் சேர்க்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இதுவரை, 2 ஆயிரத்து, 996 பேரின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 227 பேரின் ஆவணங்கள் பரிசீலனையில் உள்ளது. 621 பேரிடம் விசாரிக்க வேண்டியுள்ளது.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement