வள்ளல் சீதக்காதி சாலையில் குடிநீருக்காக தோண்டிய பள்ளம் சீரமைக்கப்படாத அவலம்
கீழக்கரை: கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் கடந்த மாதம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் சாலையின் நடுவே தோண்டிய பள்ளத்தை தற்காலிகமாக கூட சரி செய்யாமல் அப்படியே விட்டுச் சென்றுள்ளனர்.
வள்ளல் சீதக்காதி சாலையில் அரசு மருத்துவ மனை அருகே இரு புறங்களிலும் ஏராளமான கடைகள் உள்ள இடங்களில் சாலையின் நடுப் பகுதியில் குடிநீர் பைப் பதித்துள்ளனர். தார் சாலைக்கும் அதற்கும் அரை அடி பள்ளமாக இருப்பதால் ஏராளமானோர் விழுந்து காய மடைகின்றனர்.
அப்பகுதி மக்கள் கூறியதாவது:
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் தற்காலிகமாக தார் சாலையை சமப்படுத்தி விட்டு செல்லுங்கள் என்று கூறியவுடன் வாகன டிரைவர் கண்டுகொள்ளாமல் வேகமாக சென்றுவிட்டார். இதனால் பாதிப்பை சந்திப்பது என்னவோ பொது மக்கள் தான். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி தார் சாலையை சீரமைக்க உரிய நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை செய்ய வேண்டும்.
இதன் வழியாக ஏராள மான வாகனங்கள் நாள்தோறும் பயணிக்கின்றன. எனவே குறைகளை நிவர்த்தி செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
மேலும்
-
நீரிழிவு நோய் பாதிப்பில் இந்தியாவுக்கு 2ம் இடம்
-
விமானத்தை இயக்க மறுத்த பைலட், ஊழியர்களுடன் பயணியர் மோதல்
-
பார்லி., விசாரணை குழுவுக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு தள்ளுபடி பணமூட்டை விவகாரம்:
-
மஹாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில், பா.ஜ. கூட்டணி அபாரம்! : தாக்கரே ஆதிக்கம் முடிந்தது
-
குற்றவாளிகளை பாதுகாக்கிறார்!
-
இந்திய கூட்டணியில் மாற்றம் வருமா: மூன்றாவது போட்டியில் எதிர்பார்ப்பு