'நம்ம ஊரு மோடி' பொங்கல்

பரமக்குடி: பரமக்குடி நகர் பா.ஜ., சார்பில் தரைப்பாலம் அருகில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்பு 'நம்ம ஊரு மோடி' பொங்கல் கொண்டாடப்பட்டது.

நகர் தலைவர் சுரேஷ்பாபு தங்கராஜ் தலைமை வகித்தார். நகர் பொறுப்பாளர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் முரளி தரன், பொதுச் செயலாளர் குமார், செயற்குழு உறுப்பினர் சண்முகராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர் இளங்கண்ணன், மாவட்ட துணைத் தலைவர் சங்கர், மாவட்டச் செயலாளர் ரவி, நகராட்சி கவுன்சிலர் பானுமதி, மத்திய அரசு வக்கீல்கள் சுரேஷ், பிரபு மற்றும் மகளிர் அணி யினர் உள்ளிட்ட கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

அப்போது 21 பானைகளில் பாரம்பரிய முறையில் பொங்கல் வைக்கப்பட்டு முருகன் கோயிலில் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர்.

Advertisement