விடுமுறையை குதுாகலிக்க கடற்கரையோர தென்னந்தோப்பு செல்லும் உள்ளூர் பயணிகள்
கீழக்கரை: கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி, செங்கழு நீரோடை, இடிந்தகல் புதுார், பாரதிநகர், சின்ன மாயாகுளம் உள்ளிட்ட கடற்கரையோர சுற்று வட்டார கிராமங்களில் ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன.
கடல் அருகே உள்ள தென்னந்தோப்புகளில் அவற்றின் உரிமையாளர்கள் தங்களுக்கு வேண்டப் பட்ட உள்ளூர் பயணி களுக்கு மட்டும் விடுமுறை காலங்களில் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கின்றனர். உள்ளூர் பயணிகள் கூறியதாவது:
கீழக்கரையை சுற்றிலும் உள்ள பெருவாரியான குக்கிராமங்களை ஒட்டி ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன. இங்கு இயற்கையான முறையில் பொழுது போக்கும் பல்வேறு கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தென்னந்தோப்புகளும் உள்ளன.
சிறுவர்களுக்கான ஊஞ்சல், விளையாட்டு சறுக்குதல் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்களும் உள்ளன. உள்ளூர் மக்கள் குளித்து மகிழ்வதற்காக நீச்சல் தொட்டியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குடும்பத்துடன் தென்னந்தோப்புகளுக்கு வந்து தங்கி இருந்து பிரியாணி உள்ளிட்ட உணவுகளை சமைத்து சாப்பிட்டு காலை முதல் மாலை வரை இருந்து பொழுது போக்கிவிட்டு பின்னர் தங்கள் வீடுகளுக்கு செல்கின்றனர். இயற்கையான கடற்கரை காற்றும் சுகாதாரமான சூழலும் இது போன்ற உள்ளூர் தென்னந்தோப்பு சுற்றுலாக்களுக்கு பயன் உள்ளதாக அமைகிறது.
இவற்றிற்கு ரூ.1000 முதல் 3000 வரை குறிப்பிட்ட தொகையை நாள் ஒன்றுக்கு வாடகையாகவும் பெற்றுக் கொள்கின்ற னர். ஒரு சிலர் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இலவச மாக பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி அளிக்கின்றனர்.
மொத்தத்தில் பொங்கல் உள்ளிட்ட விடுமுறை தினங்களை கொண்டாடுவதற்கு இது போன்ற தென்னந்தோப்பு சுற்றுலாக்கள் பெருவாரியான மக்களை கவர்ந்து வருகிறது என்றனர்.
மேலும்
-
நீரிழிவு நோய் பாதிப்பில் இந்தியாவுக்கு 2ம் இடம்
-
விமானத்தை இயக்க மறுத்த பைலட், ஊழியர்களுடன் பயணியர் மோதல்
-
பார்லி., விசாரணை குழுவுக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு தள்ளுபடி பணமூட்டை விவகாரம்:
-
மஹாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில், பா.ஜ. கூட்டணி அபாரம்! : தாக்கரே ஆதிக்கம் முடிந்தது
-
குற்றவாளிகளை பாதுகாக்கிறார்!
-
இந்திய கூட்டணியில் மாற்றம் வருமா: மூன்றாவது போட்டியில் எதிர்பார்ப்பு