பெட்ரோல் பங்க்கில் தீ

திருப்பூர்: திருப்பூர், மங்கலம் ரோடு, ஜீவா நகரில் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. வளாகத்தின் ஒருபுறம் பெட்ரோல் அடிக்கும் பம்ப் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு எரிய ஆரம்பித்தது.

பணியில் இருந்தவர்கள், அணைக்க முயன்றனர். தெற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, இரண்டு பம்பிலும் எரிந்த தீயை அணைத்தனர். துரித மாக தீயை அணைத்ததால் மற்ற இடங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டு, பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சென்ட்ரல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement