பூமிதானம் வழங்கல்

விருதுநகர்: விருதுநகரில் தமிழ்நாடு பூமிதான வாரிய நிலத்தின் சார்பில் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் வீட்டுமனை வினியோக பத்திரங்கள் வழங்கப்பட்டது.

கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்தார். விருதுநகர் எம்.எல்.ஏ., சீனிவாசன் முன்னிலை வகித்தார். வருவாய்த்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் சிவகாசி கீழத்திருத்தங்கலில் வசிக்கும் வசிக்கும் 23 நிலமற்ற விவசாயிகளுக்கு வீடு கட்டுவதற்கு வீட்டுமனை வினியோகப் பத்திரங்களை வழங்கினர். டி.ஆர்.ஓ., ஆனந்தி, சிவகாசி தாசில்தார் லட்சம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஆனந்தி, சிவகாசி தாசில்தார் லட்சம், அரசு அலுவலர்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement