காமராஜர் நகர்

அவிநாசி, காமராஜர் நகரில், காமராஜர் நகர் குடியிருப்போர் நல சங்கம், காமராஜர் இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து, பொங்கல் விளையாட்டு விழாவை நடத்தின.

சிறுவர், சிறுமிகளுக்கான ஸ்லோ சைக்கிள், பலுான் உடைத்தல், முறுக்கு கடித்தல், தவளை போட்டி, சாக்குப்போட்டி, மகளிருக்கான இசை நாற்காலி, கயிறு இழுத்தல், பாட்டு போட்டி, கவிதை போட்டி உள்ளிட்டவை நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement