போலி ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு : புதுச்சேரி நபரிடம் ரூ.1.13 கோடி மோசடி
புதுச்சேரி: போலி ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்து, மூலக்குளத்தை சேர்ந்தவர் ரூ. 1.13 கோடியை மோசடி கும்பலிடம் இழந்தார்.
புதுச்சேரி, மூலக்குளத்தை சேர்ந்தவர், ஆன்லைன் டிரேடிங் செய்ய விரும்பி சமூக வலைதளத்தில் தேடியுள்ளார். அப்போது, அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் டிரேடிங்கில் முதலீடு செய்து எப்படி திறமையாக சம்பாதிக்கலாம். அதிக லாபம் தரும் டிரேடிங் நிறுவனங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்து கொள்ளும்படி தெரிவித்துள்ளார்.
அதை நம்பி, மர்ம நபர் தெரிவித்த வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்துள்ளார். பிறகு, அந்த குழுவில் ஆன்லைன் டிரேடிங் தொடர்பான பல்வேறு தகவல்கள் குறித்து தினசரி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர், மர்ம நபர் அனுப்பிய ஆன்லைன் டிரேடிங் லிங்கில் பல்வேறு தவணைகளாக ரூ. 1 கோடியே 13 லட்சத்து 75 ஆயிரம் முதலீடு செய்துள்ளார். அதன்மூலம் அவருக்கு வந்த லாப பணத்தை எடுக்க முயன்றபோது, வருமான வரி, ஜி.எஸ்.டி., கட்ட வேண்டும் என, தெரிவித்துள்ளனர்.
அதன்பிறகே, மோசடி கும்பலிடம் போலி ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்து பணத்தை இழந்தது தெரியவந்தது.
இதேபோல், சொக்க நாதன்பேட்டை சேர்ந்தவர் 59 ஆயிரத்து 711, ரெயின்போ நகரை சேர்ந்தவர் 65 ஆயிரம், வடமங்கலத்தை சேர்ந்தவர் 75 ஆயிரம் என 4 பேர் மோசடி கும்பலிடம் ரூ. 1 கோடியே 15 லட்சத்து 74 ஆயிரத்து 711 இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
எம்ஜிஆர் பிறந்தநாள் சிறப்புப்பதிவு; எம்ஜிஆர் தழுவிய சட்டை தொண்டர் வீட்டில் அலங்கரிப்பு
-
நவீன ஜல்லிக்கட்டு போட்டி
-
விசைத்தறியை நவீன மயமாக்கும் சப்ளையர் திட்டத்தில் சேர விண்ணப்பிக்க அழைப்பு
-
இலக்கிய பேரவை திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்
-
மாட்டுப்பொங்கல் கோலாகலம்
-
தை மாத பிரதோஷத்தையொட்டி ஏகாம்பர ஈஸ்வரருக்கு சிறப்பு பூஜை