கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் சி.இ.ஓ.,க்களுக்கு விருது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் சி.இ.ஓ.,க்கள்தமிழக அரசின் சிறந்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில், அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கிய சி.இ.ஓ.,க்களுக்கு விருது வழங்குவதற்கான பட்டியல் வெளியிடப்பட்டது.இதில் கள்ளக்குறிச்சி சி.இ.ஓ., கார்த்திகா சிறந்த முதன்மைக் கல்வி அலுவலருக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல் விழுப்புரம் சி.இ.ஓ., அறிவழகன்,கடலுார் சி.இ.ஓ., ரமேஷ் ஆகியோரும் இந்த விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement