கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் விழா கோலாகலம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடும்பத்தினருடன் அதிகாலையில் பொங்கல் வைத்து, மக்கள் வழிபாடு நடத்தினர்.
தமிழகம் முழுவதும் நேற்று, தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொருத்தவரை நகர்புறங்களில் வசிப்போர் வீட்டின் மாடிப்பகுதியில் கரும்பு, பானையுடன் பொங்கல் வைத்து, சூரிய பொங்கல் கொண்டாடினர். இதில், உறவினர்கள், அக்கம் பக்கத்தினரை அழைத்து 'பொங்கலோ பொங்கல்' என குலவையிட்டு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தும், பொங்கல் பரிமாறியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கிராம பகுதிகளில், விவசாயிகள் தங்கள் மாடுகளை குளிப்பாட்டி, அலங்கரித்து குடும்பத்துடன் வீட்டின் வாசலில் பொங்கலிட்டு, சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், வழிபாடு நடத்தினர்.
தொடர்ந்து குடும்பத்தினருடன் கோவில்களுக்கு சென்றும், அவதானப்பட்டி சிறுவர் பூங்கா, கே.ஆர்.பி., அணை பூங்காவிற்கும் சென்றும் மகிழ்ந்தனர்.
மேலும்
-
குடியரசு தின அணிவகுப்பு: உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து நாடு முழுவதும் உஷார்!
-
யாருடன் கூட்டணி; டில்லியில் காங்., நிர்வாகிகளுடன் ராகுல் ஆலோசனை
-
அன்னுார் வட்டாரத்தில் பொங்கல் கோலாகல கொண்டாட்டம்
-
உங்களுக்கு செட் ஆகல சார்.. வெயிட் பண்ணுங்க: இலவசங்கள் அறிவித்த இபிஎஸ்சுக்கு டிஆர்பி ராஜா பதில்
-
ஈரானில் தொடரும் வன்முறை; விமானத்தில் டில்லி திரும்பிய இந்தியர்கள்!
-
பொலிவுறு நகரம் இந்தூரில் சுத்தமான குடிநீர் இல்லை; ராகுல் விமர்சனம்