ஜல்லிக்கட்டில் சிறந்த வீரருக்கு அரசு வேலை வழங்கப்படும்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
மதுரை: ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பாக விளையாடி, அதிக காளைகளை பிடிக்கும் வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அலங்காநல்லூரில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் ஸ்டாலின் நேரில் கண்டு களித்தார். அப்போது, அவர் இரு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது;
உலகப்புகழ் பெற்றிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்க்கும் போது, நமக்கெல்லாம் வீரம் வருகிறது. அதனை அடக்கும் காளையர்களை பார்க்கும் போது, நமது தமிழ் மண்ணிற்கு ஒரு பெருமையாக இருக்கிறது.
திராவிட மாடல் ஆட்சியில், வீரம் விளைந்த மதுரை மண்ணில் கருணாநிதி நூற்றாண்டு நூலகம் மற்றும் தமிழர்களின் அடையாளமாக இந்த வீர விளையாட்டிற்கு, எருது விடும் அரங்கம் கட்டிக்கொடுத்திருக்கிறோம்.
இப்போது ஜல்லிக்கட்டை பார்க்க முதல்வராக வந்திருக்கும் நான், ஏதாவது அறிவிப்பை வெளியிட்டு சென்றால் தான் அனைவருக்கும் திருப்தியாக இருக்கும். ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கி சிறந்து விளங்கும் வீரர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில், கால்நடை பராமரிப்புத்துறையில் உரிய அரசுப் பணியிடங்களுக்கு பணியமர்த்த வழிவகை செய்யப்படும்.
2வது அறிவிப்பாக, தமிழகத்தின் ஜல்லிக்கட்டு காளைகளுக்காக, அலங்காநல்லூரில் ரூ.2 கோடி செலவில் சிறந்த உயர்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இருக்கவே இருக்கு டாஸ்மாக் கில் கை வைத்தால் அறிவித்த இலவசங்களை கொடுத்து விடலாம்? அப்புறம் கள்ள சாராயத்தை கட்டுப்படுத்த ரொம்ப போராடனும்?
திமுக ஒரு தெலுங்கு சிறுபான்மையினரின் கட்சி அது போய் ஆந்திரவை ஆளட்டும்
அதே ஜல்லிக்கட்டில் மாடு முட்டி இறக்கும் மாடுபிடி வீரர்களுக்கு இழப்பீடு ₹ 5 கோடி கொடுப்பீர்களா? மக்களை மூளைச்சலவை செய்யும் வாக்குறுதி.
உலகின் நம்பர் ஒன் பைத்தியம்
பத்துரூபாய் பாலாஜியை ஏனோ நினைவுக்கு கொண்டுவருகிறேன் ஸ்டாலின்
கருவாடு மீனாகாது. கறந்த பால் மடிபுகாது. வாடிய மலர் மணக்காது.
காங்கிரஸ் தேறாது ” அறிவாலயமும் உருப்படாது.
நிதி வீட்டு மாடுகளை மேய்த்து குளிப்பாட்டி தீவனம் வைத்து பால் கறக்கும் பணியை அளிப்பார்கள்.( கிட்டத்தட்ட ஆர்டர்லி மாதிரி).
அறிவாலய அடிமையே ஆகுயர்த்தோன் உண்மையை சொல் நீ பொய்ஹிந்புரம் அல்லது புஞ்சை மன்னர் என்கிற இருவரில் ஒருவர்தானே ஏற்கனவே நீ ஒரு போலி பெயரில் வலம் வரும் மூர்க்கன் இந்த லெட்சணத்துல இந்த புது பெயர் வேறயா?
அப்போ படிச்சவங்களுக்கு அரசாங்க வேலை தர மனசில்லையா உடன்பிறப்பே
அங்கே இன்று எடப்பாடி பொளந்து கட்டிட்டார்....மேலும்
-
குடியரசு தின அணிவகுப்பு: உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து நாடு முழுவதும் உஷார்!
-
யாருடன் கூட்டணி; டில்லியில் காங்., நிர்வாகிகளுடன் ராகுல் ஆலோசனை
-
அன்னுார் வட்டாரத்தில் பொங்கல் கோலாகல கொண்டாட்டம்
-
உங்களுக்கு செட் ஆகல சார்.. வெயிட் பண்ணுங்க: இலவசங்கள் அறிவித்த இபிஎஸ்சுக்கு டிஆர்பி ராஜா பதில்
-
ஈரானில் தொடரும் வன்முறை; விமானத்தில் டில்லி திரும்பிய இந்தியர்கள்!
-
பொலிவுறு நகரம் இந்தூரில் சுத்தமான குடிநீர் இல்லை; ராகுல் விமர்சனம்