எம்ஜிஆரின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க பாடுபடுவோம்; பிரதமர் மோடி
புதுடில்லி: 'தமிழக முன்னேற்றத்திற்கு எம்ஜிஆர் ஆற்றிய பங்கு மகத்தானது. அவரது தொலைநோக்கு பார்வையை நனவாக்க தொடர்ந்து பாடுபடுவோம்," என்று எம்ஜிஆரின் பிறந்த நாளில் பிரதமர் மோடி உறுதி பூண்டுள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், "எம்ஜிஆரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு அவரது பங்களிப்பு மகத்தானது. தமிழ் கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்துவதிலும் அவரது பங்கு அதே அளவுக்குக் குறிப்பிடத்தக்கது. சமூகத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நாங்கள் எப்போதும் பாடுபடுவோம்," எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எம்ஜிஆரின் பெருமையைப் போற்றும் விதமாக ஒரு வீடியோவையும் பிரதமர் மோடி பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது; எம்ஜிஆர் சினிமாத்துறையில் இருந்து அரசியல் மேடை வரை மக்கள் இதயங்களில் ஆட்சி செய்தார். அவரது வாழ்க்கை, அவரது முழு அரசியல் பயணமும் ஏழைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. ஏழைகளுக்கு மரியாதைக்குரிய வாழ்க்கையை உறுதி செய்வதற்காக அவர் அயராது உழைத்தார். பாரத ரத்னா எம்ஜிஆரின் லட்சியங்களை நிறைவேற்ற இன்று நாம் அனைவரும் பாடுபடுகிறோம். அவர் தரமான கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்புக்காகப் பாடுபட்டார்.
அதனால் தான் சமூகத்தின் இளைஞர்களும், பெண்களும் அவரை மிகவும் மதிக்கிறார்கள். அதனால் தான் இன்றும் கூட, சமூகத்தின் ஏழைப் பிரிவினர் அவரை தங்கள் மிகச்சிறந்த தலைவர் என்று அழைக்கிறார்கள். பாரத ரத்னா எம்ஜிஆருக்கு நான் வணக்கம் மற்றும் அஞ்சலியை செலுத்துகிறேன், எனக் கூறியுள்ளார்.
காமராஜருக்கு பிறகு ஏழைமக்களுக்கு இறங்கிய மனிதர் MGR மட்டுமே. சுய நலம் இல்லாமல் ஏழைகளுக்கும், மாணவர்களுக்கும் நல்லது செய்ய முயற்சி செய்தார். சட்டம் ஒழுங்கு ஓரளவு நன்றாக இருந்தது. அரசாங்கத்தின் சாராய வியாபாரம் பல குடும்பங்களில் பிரச்சனை உண்டாக்கியது என்பது உண்மை.
அவருடன் ஆட்சியில் சேர்ந்தவர்கள் இன்ஜினியரிங் காலேஜ், மெடிக்கல் காலேஜ், சினிமா தியேட்டர்கள் என்று சொத்துக்களை குவித்தாலும், இவர் தனிப்பட்ட முறையில் நல்லவராக இருந்ததால் மக்கள் மனதில் இன்றும் நிற்கிறார்.
MGR ன் தொலைநோக்கு பார்வை என்னாங்கிறது அதிமுக்காரனுக்கே தெரியாது.. ஹூம், தேர்தலுக்காக என்னனென்ன சொல்ல வேண்டி இருக்க்கிறது..
அது எம்ஜிஆர் க்கே தெரியாது.
முட்டி போடறதெல்லால் அறிவாலய அள்ளக்கையாவே இருக்குதுங்க..
திரு மதிப்பிற்குரிய அப்புசாமி அவர்களே,
புரட்சித் தலைவர், பாரதரத்னா எனப் பட்டம் வழங்க அவரின் பல தொலைநோக்கு எண்ணங்களே காரணம். இதுவரை பலரும் அறியாத ஒன்றைக் கூறுகிறேன்.
1985-இல் உலக அளவில் பொருளாதார மந்தநிலை நிலவிய பொழுது, அப்போதைய தமிழக அரசினால் TEDA தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை ஏற்படுத்தப்பட்டு, காற்றாலை மின்னுற்பத்தி 55KW என ஆசியாவிலேயே முதன்முதலில் தமிழகத்தில்தான் செயல்படுத்தப்பட்டது. அத்திட்டத்தின் விரிவாக்கம்தான் இன்று 15GW அளவிற்கு வளர்ந்துள்ளது.
தெற்கு மற்றும் மேற்குத் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு காற்றாலைக் கோபுரத்தின் ஒவ்வொரு சுற்றும் மறைந்த தலைவரின் புகழ்பாடும். இந்த எரிசக்தி முகமையே தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. மிக முக்கியமான ஒன்று, SUSTAINABLE DEVELOPMENT GOAL 7 - Affordable and Clean Energy நிலையான வளர்ச்சி குறிக்கோள் ஏழு - நிலையான எரிசக்தி. ஐக்கிய நாடுகள் சபை 2015-இல் இதனை இயற்றியது, ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன்பே இதற்கு வழிகாட்டியவர் M.G.R. அவர்கள்.
மேட்டூர் அனல் மின் நிலையம், வட சென்னை அனல் மின் நிலையம், தூத்துக்குடி அனல் மின் நிலைய விரிவாக்கம் அனைத்துமே எம் ஜி ஆரின் தொலை நோக்கு பார்வைதான்.
எம்ஜியாரின் தொலைநோக்கு பார்வை பூமியிலிருந்து சூரியனையும் சந்திரனையும் பார்த்தது மட்டுமே.
தீய சக்தி தலைதூக்காமல் பார்த்துக்கொண்டவர் .....
தொலையட்டும் விடுங்கள் தலைவரே அக்காலத்தில் எம்ஜிஆரை வளர்த்து அவர்களது பாட்டி திமுகவை உடைத்தார் இறுதிவரை ராஜீவ் காந்திக்கு நமது இயக்கத்தின் மீது பட்டே கிடையாது இதோ வெளிநாட்டுச் சேர்ந்த சோனியா அவர்கள் நம்மோடு நெருங்கி வந்தார் ஒரு சதவீத ஓட்டும் கூட கிடையாது இரண்டு மாவட்டங்களைத் தவிர அங்கும் இப்பொழுது என்ன நிலைமை என்று தெரியாது தனியாக நான் மட்டும் 140 லிருந்து 160 வரை வெல்வோம் பிசிக கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து ஒரு பத்து பதினைந்து தொகுதி வரும் 120க்கு மேல் வெல்வோம் கவலையே படாதீர்கள் துரத்தி அடியுங்கள் இந்த காங்கிரஸ் ஐ அவர்களை
அதிமுக தலைமை யை மாத்துங்க அவ்வளவு தான் சொல்லிட்டேன்
தமிழ் பட்டப்பாடு போதாது என்று M,GR இப்போ விளங்கிடும் நீங்கள் எந்த ராகத்தில் ரூபத்தில் வந்தாலும் தமிழக மக்கள் ஏமாறமாட்டார்கல் , மதுரை கோவை மெட்ரோ கிடையாது என்று சொன்னபோதே உங்கள் சாயம் வெளிறி விட்டது.
நீ யாரு தமிழக மக்கள் சார்பா பேசறதுக்கு . நீ ஒரு திராவிட கே கூ. உன் எண்ணத்தை உன்னோட வச்சுக்க . திராவிட அடிமையே அடிக்கடி இங்கே வந்து எதுக்கு வாந்தி எடுக்கரே.
என்றும் மக்கள் முதல்வர் புரட்சி தலைவர் தான் இன்றும் என்றும் மறக்க முடியாத தலைவர் அவர்தான்.... இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.... என்றும் வாழ்வார்
கூட்டணி கட்சியான அ.தி.மு.க வின் தலைவர் எம்.ஜி.ஆரை மோடி கொண்டாடுவது போல தனது கூட்டணி கட்சியான தி.மு.கவின் தலைவர் கருணாநிதியை ராகுல் கொண்டாடுவாரா?
வச்சான் பாரு ஆப்புமேலும்
-
அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு; மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதல்வர்
-
தமிழகத்தில் நடப்பது சர்வாதிகார ஆட்சியா? காடேஸ்வரா சுப்ரமணியம் கேள்வி
-
ஒராண்டில் 539 தாய்மார்கள் தாய்ப்பால் தானம்: 924 குழந்தைகள் நலம்!
-
அசாம் முன்னேற்றம் அடைவதை காங்கிரஸ் விரும்பவில்லை; பிரதமர் மோடி
-
வங்கதேசத்தில் மற்றொரு கொடூரம்; கார் ஏற்றி ஹிந்து தொழிலாளி கொலை!
-
யாரும் எந்த முட்டுக்கட்டையும் போடக் கூடாது; கிரீன்லாந்து விவகாரத்தில் டிரம்ப் திட்டவட்டம்