ஈரானில் 800 பேரின் மரண தண்டனை ரத்து; அதிபர் டிரம்ப் பாராட்டு
வாஷிங்டன்: 800க்கும் மேற்பட்டோருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்து செய்ததற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் அரசை பாராட்டினார்.
ஈரானில் பணவீக்கம் அதிகரித்ததன் எதிரொலியாக கடந்தாண்டு டிசம்பரில் இருந்து மக்கள் தொடர் போராட்டங்களில் இறங்கி உள்ளனர். போராட்டம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே வரும் சூழலில், கிட்டத்தட்ட 3000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
வன்முறையில் ஈடுபட்டு பொதுசொத்துகளை சேதப்படுத்தியவர்களுக்கு அந்நாட்டு சட்டத்தின்படி, தூக்கு தண்டனை விதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்தது. இந்த சூழலில், அந்நாட்டு வெளியுறவுத்துறை அப்பாஸ் அராக்சி, போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிருபர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது: ஈரானில் 800 பேரை நேற்று தூக்கில் போட திட்டமிடப்பட்டு இருந்தது. அதனை அவர்கள் ரத்து செய்துள்ளனர். இதனை நான் பெரிய அளவில் மதிக்கிறேன். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஈரானில் 800க்கும் மேற்பட்டோரின் மரண தண்டனைகள் ரத்து செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்
ரப்பர் வாயின் அதிசயம், இல்லையேல் வரியை போட்டுவிடுவான்.
அடடா 800 மூர்கனுங்க தப்பிச்சுகிட்டானுங்களே
அவனுங்க ஒரிஜினல் மூர்க்கனுங்க டுபாக்கூர் மூர்க்கனுங்க ஓவரா ஆடுவானுங்க
தூக்கு தண்டனைக்கும் மேலே தண்டனை தருவாங்க,அதுக்கு தூக்கே மேல்....
டிரம்ப் கூட பாராட்டு தெரிவிக்கிறார். ஆச்சர்யம்.மேலும்
-
அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு; மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதல்வர்
-
தமிழகத்தில் நடப்பது சர்வாதிகார ஆட்சியா? காடேஸ்வரா சுப்ரமணியம் கேள்வி
-
ஒராண்டில் 539 தாய்மார்கள் தாய்ப்பால் தானம்: 924 குழந்தைகள் நலம்!
-
அசாம் முன்னேற்றம் அடைவதை காங்கிரஸ் விரும்பவில்லை; பிரதமர் மோடி
-
வங்கதேசத்தில் மற்றொரு கொடூரம்; கார் ஏற்றி ஹிந்து தொழிலாளி கொலை!
-
யாரும் எந்த முட்டுக்கட்டையும் போடக் கூடாது; கிரீன்லாந்து விவகாரத்தில் டிரம்ப் திட்டவட்டம்